Wednesday, August 20, 2008

சரத்குமாருக்கு தமிழை உச்சரிக்கும் தகுதியில்லை.

என் தமிழக உறவுகளே,

நான் தமிழன் என்னும் உரிமையோடு உங்களுக்கு சில உண்மைகளைப் பரிமாறும் நோக்கில் எழுதுகின்றேன். நடிகர் சரத்குமார் என்று ஈழத்தமிழர் அவரை ரசிப்பர். ஆனால்? நடிகர் சரத்குமார் இலங்கைக்கு உலக இந்துமாநாடு நடந்தவேளை வந்திருந்தபோது முதல்முறை நான் நேரில் கண்டேன். அவரது திருமதியுடன் வந்திருந்தார்.
இலங்கையில் சக்தி தொலைக்காட்சி அலைவரிசையில் மின்னல் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி வருகை தந்திருந்தார்.அப்படி ஒருமுறை வந்திருந்தபோது சக்தி தொலைக்காட்சி நிலையத்தில் நேரிலே சந்தித்தேன் இரண்டாம் தடவையாக. நான் அன்று அங்கு வேறு ஒருதேவை காரணமாக சென்றிருந்தேன். அவரிடம் கையொப்பம் வாங்கவும் தவறைல்லை அம்முறை.
இலங்கைக்கு வந்தவர்.........இலங்கைத்தமிழரின் துன்பத்தை நேரில் கண்டவர்...............ஆனால் ஒருவார்த்தை தமிழகத்தில் ஈழத்தமிழர் பற்றி பேசினார் இல்லை. ஏன்?
இலங்கையில் அவரது திருமதியாரின் ராடன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் அரங்கேறவேண்டும்.சக்தி தொலைக்காட்சி இலங்கையின் சிங்கள பின்புலத்தையுடையது.எனவே அவரின் இலங்கை வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரே ஒரு நோக்கம்தான்.

இன்று இவர் நடிகர் சங்கத்தலைவர். கர்நாடகத்திற்கு எதிராக பெரிய அளவில் அமைதிப்போராட்டத்தை நடத்தியவர். உடனே எல்லோரும் இவர் தமிழ் உணர்வாளர் என்று முத்திரை குத்திவிட்டனர்.அதை பயன்படுத்தி நடிகர் ரஜனி கர்நாடகத்தில் மன்னிப்பு கேட்டதற்கு கண்டன அறிக்கைவேறு இவரிடமிருந்து.
அரசியல் கட்சிவேறு தொடங்கி உண்மையாகவே நடிக்கும் நடிகர் இவர்.
கர்நாடகத்தில் தமிழன் அடிக்கப்பட்டான் என்று கொதித்தெழுந்தவருக்கு ஈழத்தில் தமிழன் கொல்லப்படுவது கண்ணாலே கண்டும் தெரியவில்லை. கண்ணிருந்தும் குருடர்களாக!
ஒருவன் இல்லை இருவர் இல்லை............ஒரு இலட்சம் பேர் இறந்துவிட்டனர் யுத்தத்தால். பல இலட்சம் பேர் உயிர்காக்க நாடு விட்டு நாடு சென்று அகதியாய் வாழ்கின்றனர்.
உலக செய்தியாய் வந்துவிட்ட ஈழச்செய்தியை ஈழம் சென்றும் தெரியாத இவர் எப்படி தமிழ்பற்றுப்பற்றி பேசும் உரிமைபெற்றார்? கன்னட ரஜனியிடம் தமிழ்பற்றை அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கும் உரிமையை இந்த தமிழ் வேடதாரி எங்கனம் பெற்றார்?
கன்னடத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய துணிந்தவர் ஈழத்தமிழருக்காய் போராட்டம் செய்ய வேண்டி நாம் நிற்கவில்லை தமிழன் எனும் அடைமொழியைக் காட்டி அவரிடம்.
இலங்கை கடலோரத்தில் இறக்கும் தமிழக மீனவருக்காய் ஒரு ஆர்ப்பாட்டம்? இலங்கை அரசை இவருக்கு பகைக்கதுணிவு வராது. ஏனெனில் இலங்கையில் இவரின் மறைமுக வர்த்தகத்திற்கு ஆபத்துவந்துவிடக்கூடாதல்லவா! கர்நாடகத்தில் ரஜனி சொத்து வைத்துள்ளதாக கொக்கரித்த இவரிடம் கொக்கரித்தது நியாயமா என்று கேட்கும் உரிமை சாதரண ஒவ்வொருவருக்கும் உண்டே!
வேண்டுமென்றால் தமிழக உறவுகளே ஒரு விண்ணப்பம் உங்களிடம். இலங்கை அரசால் கொல்லப்பட்ட மீனவருக்கு ஆதரவாய் ஒரு உண்ணாவிரதபோராட்டத்தை நடத்தக்கோருங்கள்.
நடத்தினால் "தமிழக"உணர்வு உண்டு. இல்லாவிட்டால் வெறும் திரையரங்கு தாக்கியதால் ஏற்பட்டவிளைவுதான் தமிழ் திரையுலகின் போராட்டம் என்க.
நடிகர் சரத்குமார் தமிழராய் நடிக்கும் நல்ல நடிகர் என்க.அவ்வளவே. ( இவர்களுக்கு தமிழ்பற்றை காட்ட ரஜனி எனும் தனிமனிதன். அவ்வளவே இவர்கள் பற்று என்று உணர்க.)

11 comments:

இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதராவாக பேசினால் தான் உன்மையான அரசியல்வாதியா??இங்கே தமிழ்நாட்டிலேயே தீர்க்க வேண்டிய ப்ரச்சனை நிறைய இருக்கிறது. முதலில் அதை களைந்து விட்டு பிறகு அண்டை நாட்டு சகோதரர்களின் பிரச்சனையில் தலையிடலாம்.

சரத்குமார் தமிழீல மக்களுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என்றால் அது ஒன்றும் குற்றமில்லை.

அதரவு தருவது என்பது அவரவர் விருப்பம்.

ஐயா, கன்னட மாநிலத்தில் வாழும் தமிழர் தமிழர்கள். இலங்கைத் தமிழர் தமிழரில்லை. என்னய்யா நியாயமிது? கன்னட ரஜனியிடம் தமிழ் பற்றை எதிர்பார்க்கும் சரத்குமாரிடம் ஈழத்தமிழர் தமிழ் பற்றை எதிர்பார்ப்பது எவ்வகையில் குற்றமாகும்? தமிழகத்தில் ஆயிரம் பிரச்சினை இருக்கட்டும். அதைக் காரணம்காட்டி ஈழவரை புறக்கணிப்பது நியாயமாக.
சரத்குமார் நல்ல அரசியல்வாதியாக இருந்திட்டு போகட்டும். தமிழ் பற்றாளர் என்று சொல்லும் உரிமை அவரிடம் இல்லை. வேண்டுமென்றால் "தமிழக" பற்றாளர் என்று அவர் கூவட்டும்.
அதற்கு எதிர்கருத்து எம்மிடமில்லை அய்யா!!!!!

இலங்கைத் தமிழரின் துயரில் பங்கு கொள்ளவில்லை என்ற பொருளில் தான் எழுதியுள்ளேன். தமிழீ"ல" என்று நீங்கள் குறிப்பிட்டதைப்பற்றி எனக்கேதுவும் தெரியாது. மன்னிக்கவும்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று சொன்னால்,
அது 'விடுதலைப் புலிகள்' ஆதரவு என்று தவறாக புரிந்துகொள்ளும் சமூகம் இது.

அதனாலேயே பல பேர் வாய் திறக்க பயப்படுகிறார்கள்

நன்றாய் சொன்னீர்கள்............நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு.

பெருமை கூடுது
தமிழெனும் போதினிலே
சோகங்கள் மறையுது
தமிழக அன்பினிலே!
காலங்கள் வரையட்டும்- நமக்கும்
ஓர் நல்லகாலம்!

சரத்குமார், நாடார்களின் அரசியல் அரிப்புக்கு ஒரு கருவி.

அவரின் பின்புலத்தில் இருப்பது பணம். நாடார்களின் பணம்.

நாடார்களுக்கு தேவை அவர்களது பணத்தை பாதுக்காக்க ஒரு சொந்த கம்பேனி.

அந்த கம்பேனியின் ஓனர் வேறு ஒருவர்.

எம்.டி தான் சரத் குமார்.

அவரிடம் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை எதிர்பார்ப்பதே தவறு..

செந்தழல் ரவி அவர்களுக்கு,

நன்றி என்று தமிழ் வரைவதை தவிர என்னிடம் வேறு வார்த்தையில்லை. விழிப்புணர்வு பெறாதவர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம்.

"சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே! "

நன்றிகள்

நல்ல பதிவு...
தமிழனாய் பிறந்து துரோகிகளைய் வாழும் இந்த கேவலப் பிறவிகளை இந்த சமூகத்தை விட்டு வெளியேற்றும் பணியில் இது போன்ற பதிவுகளும் கூட ஒரு பங்காற்ற முடியும்!

நன்றி தங்களின் தோள் கொடுக்கும் பின்னூட்டத்திற்கு.

pl. note Shakthi tv is owned by a tamil business man called Mr.Rajamahendran.
dont give false news...

ANJANAN - COLOMBO

தாங்கள் நவின்றது ஊரறிந்தது. சக்தி நிறுவனம் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது அல்ல என்று இங்கு எங்கும் குறிப்பிடவே இல்லையே. அதன் பின்புலத்தில் யார் செல்வாக்கு உண்டு என்ற பொருளிலேயே எழுதியுள்ளேன். பங்கு யாரிடம் கூட உண்டோ அவர்கள் செல்வாக்கு அங்கு அதிகம் இருக்கும் என்பது சாதாரண வகுப்பு பரீட்சைக்கு தேரும் மாண்வனுக்குகூடத் தெரியும்.

தமிழக முதலமைச்சராக தமிழர் தான் உள்ளார். ஆனால் காங்கிரசுக்கு செவிசாய்க்கவேண்டியுள்ளது அல்லவா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புரிந்தால் தெளிக.

சக்தி நிறுவனம் யார் பின்புலத்தை உடையது என்பது ஊரறிந்தது மட்டுமல்ல உலகறிந்த விடயம். சரத்குமாரிற்கு தெரிந்த விடயம். எனவே இதற்குமேல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது எனக்கு. நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு.