Monday, July 18, 2011

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய பூசைமொழி சமஸ்கிருதம்

தமிழருடைய இசைமொழி கர்நாடகமும் தெலுங்கும் சமஸ்கிருதமும்

தமிழருடைய நாகரீகமொழி ஆங்கிலம்

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய திருமண நிகழ்வில்கூட தமிழ் இல்லை! ஏன் நாகரீகத்தமிழரின் மாப்பிள்ளையின் ஆடையில்க்கூட தமிழ்சால்பு இல்லை!

தமிழருடைய மரண நிகழ்வு பூசையில்கூட சமஸ்கிருதம்!

உலகிலேயே தன்னுடைய மொழியைவிட இன்னொருமொழியை புனிதம்....மந்திரசக்தி என்று கதையளக்கின்ற இனம் இருக்குமென்றால் அது தமிழினம் தான்!

உலகிலேயே தன்னுடைய மொழி அல்லாத இன்னொருமொழியில் பாடி ஆடி குதுகளிக்கும் என்றால் அது தமிழினம் தான்! கேட்டால் இசைக்கு மொழியில்லை!!!!

மெத்தப்படித்த ஒரே இனத்தைச் சார்ந்த இரண்டுபேர் தமதுமொழியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடினால் அது தமிழினம் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை!

காதலை சங்கத்தமிழர் கொண்டாடினர். ஆனால் இன்று.....காதலைச் சொல்லக்கூட தமிழை பயன்படுத்த மறுக்கின்றனர் திரையிலும் நடைமுறையிலும்! ஆக; தமிழுக்கு தமிழரிடத்தில் மதிப்பே இல்லை!

இப்போது சொல்லுங்கள் தமிழனுக்கு தமிழ் எதற்கு?

அடப்போங்கோ.....தமிழன் இப்படி உணர்ச்சிபூர்வமாக ஏதேனும் இருந்தால் படித்து ஒருகணம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டு, ஏதேனும் சமாதனம் சொல்லி தன்வேலையை பார்க்கத்தொடங்கிவிடுவான்!

5 comments:

தமிழ் மக்களிடம் பகுத்தறிவு குறைவாகக் காணப்படுகின்றது. நாங்கள் இதனை மாற்றியமைக்கவேண்டும்.
அண்மையிலே நம்மைவிட்டுப் பிரிந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒரு நூலிலே குறிப்பிட்ட கருத்து வருமாறு
"மத ஒழுகலாற்றைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவ தமிழர்கள் சைவத் தமிழர்களுக்கு, எந்நிலையிலும் குறைந்தவர்கள் அல்லர். உண்மையில் சைவத் தமிழர்களுக்கு இல்லாத ஒரு பெரு வாய்ப்பு கிறிஸ்தவ தமிழர்களுக்கு உண்டு. அதாவது கிறிஸ்தவ தமிழர்கள் கத்தோலிக்கராயினும் சரி புரட்டாஸ்தாந்திகளாயினும் சரி தமிழிலேயே தமது முழு வழிபாட்டையும் செய்வர். பூசைகள் தமிழிலேயே நடத்தப்படும். விவிலிய வாசிப்பு தமிழிலேயே வாசிக்கப்படும். 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் பலர் தமிழ்மொழியின் மேன்மையை அயராது எடுத்துக் கூறிவந்தனர். பெரும்பாலான சைவக் கோயில்களில் தேவாரத் திருவாசகங்கள் கூட விளங்கும்படி பாடப்படுவதில்லை. சொல்லிய பாட்டின், பொருளுணராமலே பாராயணப்படுத்திக் கூறும் முறைமை மாணிக்கவாசகர் காலமுதலே காணப்படுகின்றதுபோல தெரிகின்றது."
இதனை நாங்கள் சற்று ஆழமாக நோக்க வேண்டும்.
சுவிற்சர்லாந்து நாட்டில் சைவத்தையும் தமிழையும் வள‌ர்த்துக் கொண்டிருக்கும் சைவநெறிக்கூடம் இதற்கு நல்லதோர் உதாரணம். நாமும் ஆக்கபூர்வமாக சிந்தித்து செயற்படவேண்டிய தருணம் இது.

இப்படி அப்பப்ப பதிவு எழுதிறதுக்கும், அதை வாசிக்கிறதுக்கும், அதுக்கு மறுமொழி போடுறதுக்கும்.

நல்ல மூளைச்சலவை இது, என்னையே ஒரு கணம் சிந்திக்க வைத்த உங்கள் கம்பீர எழுத்து பல் நாள் வாழ வாழ்துகிறேன்.
அன்பின் சீலன்
http://vellisaram.blogspot.com/

mannikkavum thiru thiyarajaniyan
ennidal thamizh menporul illadha kaaraniththinaal thamiglish ezhdhugiraen ungaludaiya katturai chindhdhikka vaiththulladhdhu viraivil naam maaruvom nammavaraiyum maatruvom nandri
vaazhththukkal
surendran
surendranath1973@gmail.com
pin kurippu : ennada ivan peyar surendranath ena ulladhu ena ennavendaam en thandhdhikku therindha vadanaattu peyar adhanaal