Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Sunday, September 11, 2011

"கலைஞர்" என்று சொல்லும் நா நாவோ?

யூடியூப் காணொளிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அருமையான காணொளி என் கண்ணுள் வந்து என்னை பல கேள்வி கேட்டது!!! என் நெஞ்சறையில் நிசப்பதம்! நிசப்பதத்தின் முடிவில் கருணையில்லா நிதியை பெற்ற தாயை திட்டித்தீர்க்கும் கோபம் பெருக்கெடுத்தது! தமிழர் செய்த பாவத்தின் சம்பளம் கருணையில்லா நிதி என்று விதி எழுதியிருக்கையில் அந்தத் தாயை கோபித்து என்ன பயன்?

அது என்ன காணொளி? ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெருமகன் திரு.அப்துல்கலாம் ஆற்றிய உரை!!!!!! தமிழுக்கு அங்கு அவர் பெருமை சேர்த்த அழகை எந்தத்தமிழரும் விழா எடுத்து கொண்டாடவில்லையே என்றபோது பெருந்துன்பம் பெருக்கெடுத்தது! என் நெஞ்சறை நிசப்பதமானது!


இப்படிப்பட்ட அருமையான தமிழ்மகனை மீண்டும் இந்திய தேசத்தின் சனாதிபதியாக்க உடன்படாத கருணையில்லா நிதியை "கலைஞர்" என்று சொன்னால் தமிழ் மன்னிக்குமா? இந்திய தேசத்தின் சனாதிபதி தெரிவு மீண்டும் வந்தவேளை கருணையில்லா நிதியின் தயவில் காங்கிரசு இருந்தது.ஆனால் எங்கே திரு.அப்துல் கலாமின் புகழ் தமிழ்நாட்டில் தன்னைவிட ஓங்கிவிடுமோ என்று பயந்து மீண்டும் அப்துல்கலாமை நியமிக்க எந்தவிதமான முனைப்பையும் காட்டாது "மௌனமாய்" இருந்த கயவனை "கலைஞர்" என்று சொல்லும் நா........தமிழ் வாழும் நாவோ?

தமிழைச் செம்மொழியாக பிரகடனம் செய்த இத்தகு அருமையான தமிழ்மகனுக்கு......இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த பெருமகனுக்கு
செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பிதழையே அனுப்பாது அவமதித்த கருணையில்லா கயவனை 'கலைஞர்' என்று துதிபாடும் வாய்களுக்கு மரணத்திலும் வாய்க்கரிசி இல்லாது போக தமிழ்த்தாயே நீ சபித்துவிடு!

ஐயகோ....! இந்தத் தமிழ்மகன் இப்போதும் சனாதிபதியாக தொடர்ந்து இருந்திருக்கும் கௌரவத்தை பெற்றிருந்தால்........மூன்று பேர் மரணத்தின் பிடியில் வாடுவார்களா? அப்படியொரு கொடுமை நடந்திருக்குமா?

உங்கள் நெஞ்சறை என்ன சொல்கின்றது?

பிற்குறிப்பு - அப்துல்கலாமின் காணொளி இருக்கும் இப்பதிவில் கருணையில்லா நிதியின் நிழற்படத்தை இணைப்பதே பாவம்!

Sunday, March 6, 2011

தமிழருவி மணியன் ஊதிய சங்கும் கருணாநிதியின் செவிட்டுக் காதும்!

விகடனில் தமிழருவி மணியன் ஐயா கருணாநிதிக்கு எழுதிய மடல் வெளிவந்துள்ளது. இதோ இதுதான் அந்த மடல்.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.

காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!

ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!

ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய இந்திரா தர்பார் , செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது என்ற மறக்கமுடியாத வசனத்தைப் பூம்புகார் திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.

தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன் (கலைஞர் கடிதம் தொகுதி 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் நண்பர் என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் பூணூல் என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே; என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. அண்ணா! அண்ணா! என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும் (கலைஞர் கடிதம் தொகுதி 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?

சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை என்று சொன்ன கலைஞரே உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள் ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?

முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை என்றும் காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும் என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).

நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். சமத்துவம் இன்மையே உனக்குப் பெயர்தான் இந்து மதமா? என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர். சுயநலமே உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா? என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் சொக்கத் தங்கத்தின் கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!

கலைஞரே கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்​மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள். இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!

எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும் (கலைஞர் கடிதம் தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது. வாண்டையார், வடபாதி மங்​கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார் என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான் என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் நானும் ஒரு கம்யூ​னிஸ்ட் என்று நகைச்சுவை ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேர​புரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்​களுக்கே இடமிருக்காது கலைஞரே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? இராமன் இரு பேச்சாளன் இல்லை என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்? என்று கேட்டார் அண்ணா அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் திருமங்கலம் ஃபார்முலா வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!

இப்படிக்கு,

ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,

தமிழருவி மணியன்

தமிழருவி மணியன் ஐயா போற்றத்தக்க தமிழர்களில் தலைசிறந்த ஒருவர். அவர் கருணாநிதிக்கு மடல் எழுதுவது அவரது பெருமைக்கு இழுக்கு என்று கருதுகிறேன். திருத்த முடியாத கழுதைகளைத் திருத்த முடியுமா என்ன? தமிழருவி மணியன் ஐயா மடல் எழுத செலவழித்த நேரத்தை வேறுவிடயங்களுக்கு செலவழித்திருக்கலாம். நேரம் பொன்னானது அல்லவா? அதுதான். செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது கருணாநிதிக்கு வரையப்பட்ட இந்த மடல்!

Saturday, March 5, 2011

தமிழரே....என்ன முடிவு எடுத்துள்ளீர்?


காவேரியில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விலகவில்லை!
ஒக்கேனக்கலில் உரிமைநிலைநாட்ட விலகவில்லை!
ஈழத்தில் இரத்த ஆறு ஓடியதற்காக விலகவில்லை!
அட; வெறும் ஆட்சிப்பங்கீட்டுப் பிரச்சினையால் விலகுகின்றார்கள் இந்த திருத்த முடியாத கழுதைகள்! தமிழா.......உன் நிலையைப் பார்த்தாயா? காவேரி,ஒக்கேனக்கல் என்று உன் உரிமைகளை நிலைநாட்ட இவர்கள் விலகவில்லை! அட சீ! முத்துக்குமார் உட்பட்ட பலர் தீயில் வெந்தபோது விலகவில்லை! மீனவர்களின் பிணங்கள் தமிழகக் கரைகளைத் தொடர்ந்து தொட்டபோதும் இவர்கள் விலகவில்லை! இலங்கையில் இரத்த ஆறு பெருகி ஓடியபோதும் இவர்கள் விலகவில்லை! அப்போதெல்லாம் வெறும் கடிதம் எழுதுவதுடன் எல்லாமே முடிந்துபோயிற்று!
தமிழா, உன் உரிமையில் இவர்களுக்கு நாட்டமில்லை! உன் உயிரிலும் இவர்களுக்கு நாட்டமில்லை!

ஒக்கேனக்கல்(அனைவரும் மறந்துவிட்டார்கள் இந்தப்பிரச்சினையை!) பிரச்சினையில் சிலகாலம் பொறுத்திருப்போம் என்று கூறி தமிழரை அமைதிசெய்து காங்கிரசுக்கு மத்திய அரசுக்கு இடைஞ்சல் ஏதுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார். சிறிதுகாலம் பெருங்காலமாகி ஆட்சியும் முடிவுக்கு வந்தாயிற்று! தமிழரே.......மீண்டும் இவர்கையில் ஆட்சியைக் கொடுத்து; இன்னும் ஏமாறாதீர்!


திமுக= திருத்த முடியாத கழுதைகள்
திக=திருந்தாத கழுதைகள்
அதிமுக=அடிச்சும் திருத்த முடியாத கழுதைகள்
திருமாவளவன் கட்சி= விலைபோன எலிகள்
காங்கிரசு = காலன் (எம் இனத்தின் எமன்)
ராமதாஸ் கட்சி= தமிழர்களுக்கு மறக்கவைக்கும் மருந்தைக் கண்டறிந்த மருத்துவர் கூட்டம்!

இதில்; இனமே அழிந்து கொண்டிருந்தபோது அழித்தவர்களுக்கு சாமரைவீசிக்கொண்டிருந்த தி.மு.கழுதைகளுக்கு இப்போது நல்லதொரு பாடம் புகட்டுங்கள்! அது ஏனைய கட்சிகளுக்கும் பாடமாக அமைய வாய்ப்பை உருவாக்கும்!
தமிழர் தலைவர் என்று பட்டங்களில் பற்றுக் கொண்ட வீரமணியர் ஏதேனும் அறிக்கைகளை விடுவார்! கவிப்பேரரசு என்ற பட்டப்பற்றுப் பேரரசு வைரமுத்து கவிதைகள் பல எழுதி தினகரனில் வெளியிடுவார்! தமிழர்களே.......மயங்கிடாதீர்!

Wednesday, May 12, 2010

பெரியாரை அசிங்கப்படுத்திய விடுதலை பத்திரிக்கை

பெரியார் கடவுள் இல்லை என்று நாத்தீகம் பேசியதில் எந்தவிதமான உடன்பாடும் எனக்கில்லை. சாதி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கிய பெரியாரின் மேல் மரியாதை என்றும் உண்டு. பெரியார் சொன்னதெல்லாம் சரியானது என்ற கருத்து இருக்குமென்றால் "எங்களை அறியாமலே பெரியாரைக் கடவுளாய் ஏற்று பெரியார் மதம்" என்று மதநம்பிக்கைக்கு உரியவராகிவிடுகிறோம் !பெரியாரும் மனிதரே என்று கருதி, அவரிடம் பிழையான கருத்துகள் இருந்தன என்பதை பெருந்தன்மையுடன் ஏற்று, அவர் காட்டியவற்றில் நல்லவற்றை எடுத்து நல்லவழியில் நடப்பர் மேன்மக்கள்!

சரி விசயத்துக்கு வருவோம்;
பெரியாரின் புகழ்பரப்பும் பெரியாரின் கட்சியால் நடத்தப்படும் விடுதலை பத்திரிக்கையில் மயிலாடன் என்பவரின் எழுத்தில் "தந்தை பெரியாரின் சீடர் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் இருப்பதால், இந்த அசிங்கமான தமிழ் வருடப் பிறப்புக்குக் கல்தா கொடுத்து, தைமுதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அறிவித்து.....(12-5-2010) " என்று கருணையில்லா நிதியின் புகழ்பாடப்பட்டிருப்பது பெரியாருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தும் விடயமல்லவா?

விடுதலை பத்திரிக்கை கருணையில்லா நிதியை பெரியாரின் சீடர் என்று புகழ்கின்றது.

இலங்கையில் தமிழன்னை இரத்தம் சிந்தி வாடி வதங்கி அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தபோது, "காலைக்கும் மதியத்துக்கும்" இடையில் உண்ணாவிரதம் இருந்து பொய்யுரைத்து இன அழிவை வேடிக்கை பார்த்து அதற்கு ஒத்தாசையும் வழங்கிய கருணையில்லா நிதியும் அவரது வால் வீரமணியரும் தமிழர் தலைவர்கள் என்றோ.........பெரியாரின் சீடர்கள் என்றோ சொல்வதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்!!!!!!

விடுதலை தமிழரை விழிப்படையச் செய்யவில்லை! தமிழரைக் குருட்டாக்கி வீரமணியரையும் கருணையில்லா நிதியையும் புகழச் செய்கின்றது!!!! இப்படித்தான் சுயநலத்திற்காய் நாத்தீகத்தையும் பரப்புகிறார்கள் எஎன்பதை தமிழர்கள் உணரட்டும்!

Tuesday, March 30, 2010

தமிழகமே, அகதியை வல்லுறவு செய்தது நியாயமா?

ஈழநாட்டில் வாழமுடியாது அகதியாக தாய்வீடு வந்த திருமணமான பெண்ணை காவற்துறையினர் கற்பழித்த கொடூரம்.......கேவலம்........தமிழக மாண்புக்கே நேர்ந்த அவமானம் பற்றி தமிழகம் அமைதியாய் இருப்பது அழகாகுமா?

தன்வீட்டில் வாழமுடியாது தாய்வீட்டுக்கு வந்த திருமணமான ஏதிலிப் பெண்ணை வல்லுறவு செய்ய எங்கனம் மனம் வந்தது?

நெஞ்சை வாட்டி உருக்கி உருக்குலைய வைத்த செய்தியை இங்கு கீழே பதிவு செய்கிறேன்.
"தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

பொலிஸ்நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டுக் கொன்று விடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்துள்ளார்"




காமத்தை நெறியாய் ஒழுக, பாரததேசத்தில் படைக்கப்பட்ட காமசூத்திராவில்கூட "அடைக்கலம் புகுந்த பெண்ணிடம் உடலுறவு வைத்துக்கொள்ளுதல் கூடாது" என்று புத்திமதி உரைத்திருந்து என்ன பயன்?

ஏதிலித் தமிழ்ப் பெண்ணின் உயிரையே குடிக்கும் காமத்தை எங்கிருந்து பெற்றனர் காவல்த்துறை அதிகாரிகள்? தமிழகம் வந்ததிலும் பார்க்க, ஈழநாட்டிலேயே வாழ்ந்திருக்கலாம் என்றே அப்பெண்ணின் உறவுகளின் மனநிலை இன்று!!!!
கொடியவர்களிடம் இருந்து பாதுகாப்புத்தேடி தமிழகம் வந்தால், தமிழகத்தில் சட்டத்தைக் காக்கும் காவலர்களே கொடியவர்களாக இருப்பது கொடுமையோ கொடுமை!!!

இதுதான் கருணையில்லா நிதியின் சட்ட ஒழுங்கு?? அல்லது ஈழத்தமிழ் அகதிகளுக்குமேல் மட்டும் அவிட்டுவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனம் இதுவோ? தமிழகமும் பாதுகாப்பில்லை என்று ஈழத்தில் உள்ள ஏனையோருக்கு தோற்றத்தை உருவாக்கி, அகதிகளின் வருகையைக் குறைக்க செய்த சதியோ இது? அதுபோல் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை கற்புக்கு பாதுகாப்பில்லை என்று உணர்த்தி தமிழகத்தை விட்டு வெளியேற்ற மேற்கொண்ட தந்திரோபாயமோ இது?

யார் கண்டது கருணையில்லா நிதி இதுவும் செய்யும்..........இன்னமும் செய்யும்!!!!!!!

வாழ்க கருணையில்லா நிதியின் ஆட்சி!!!!! தொடரட்டும் ஆட்சி...........வீழ்ந்து நொருங்கட்டும் தமிழ் மாண்பு! தமிழ் மறம்!! தமிழ் குலம் !!!

Wednesday, May 13, 2009

தமிழினத்தை கூட்டிக்கொடுத்த கருணை இல்லா நிதி

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் தமிழினப் பற்றாளராக எழுந்த சூரியன் இன்று ஈழத்தமிழால் அஸ்தமனமாவது கண்கூடு! அன்று பெரியார் திடலில் பல்லாயிரம் தமிழ்த் தொண்டர்கள் எழுந்தபோது, அவர்களுடன் இணைந்து எழுந்த கருணாநிதி, அறிஞர் அண்ணாவை தனது சுயபிரபல்யத்துக்குப் பயன்படுத்தி, தனது புத்திசாதூர்யத்தைப் பயன்படுத்தி தமிழ்ப்பற்றாளராக தன்னை வெளிக்காட்டி திமுக தலைமையாகி "தமிழர் தலைவர்" என்ற மகுடத்தை தனக்குத்தானே சூட்டிக் கொண்டார்.

எம்ஜியாரின் ஆயுட்காலம்வரை தமிழக முதல்வராக வரமுடியாது தவித்தவர். இனி எக்காலமும் வரமுடியாது செய்ய, தமிழகமே விழித்தெழுவாயாக!!!!

அரசியலில் கைவந்த நடிகரான கருணாநிதி, தமிழை தனது குடும்பத்தை வளர்க்கப் பயன்படுத்தினார் என்பது வெள்ளிடைமலை.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
என்பது வள்ளுவன் வாக்கு.

கருணாநிதியின் குடும்பம் சூரியகுடும்பமாக வளர்வதற்கு தமிழ்த்தாய்தான் காரணம். ஆனால், அவள் ஈழத்தில் கண்ணீரும் கம்பலையுமாக நிற்க, இரத்தத்துள் வாடி வதங்க, எக்கவலையும் இல்லாது ஆரியக்கூட்டுக்கு தமிழைக் கூட்டிக்கொடுத்து, இத்தாலிச் சனியாளிடம் தமிழ்த்தாயின் சேலையை விற்றுவிட்டார்.

தமிழ்த்தாய் மன்னிக்குமா? மன்னிக்கலாமா? தமிழகமே, விடை சொல்லு? பின்னூட்டமாகவில்லை. வாக்குச்சீட்டு வாயிலாக!!!!!!!!

நன்றி மறந்த கருணை இல்லா கருணாநிதியை தமிழகமே, வீறுகொண்டு எழுந்து தமிழகத்தை விட்டே விரட்டுவாயாக!!!!!!கன்னடத்திடம் ஒக்கேனக்கல் பிரச்சினையில் தமிழரை இழிச்சவாயனாக்கிய கெட்டிக்காரன். கச்சதீவைத் தாரைவார்த்த நயவஞ்சகன். பாலாறு பிரச்சினையைத் தீர்க்காது தமிழரை ஏமாளிகளாக்கிய ஆரியத்திடம் "மாமா" வேலை செய்த இழியவன். தெலுங்கு நாட்டோடு எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்காது "தமிழரின்" எல்லைகள் பறிபோவது தெரியாது இருக்கும் கைவந்த நடிகன். கருணாநிதியின் குடும்பத்தையே தமிழகத்தைவிட்டு ஒதுக்கிவையுங்கள் என் இனிய உறவுகளே!!!!!!