Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, July 18, 2011

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய பூசைமொழி சமஸ்கிருதம்

தமிழருடைய இசைமொழி கர்நாடகமும் தெலுங்கும் சமஸ்கிருதமும்

தமிழருடைய நாகரீகமொழி ஆங்கிலம்

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய திருமண நிகழ்வில்கூட தமிழ் இல்லை! ஏன் நாகரீகத்தமிழரின் மாப்பிள்ளையின் ஆடையில்க்கூட தமிழ்சால்பு இல்லை!

தமிழருடைய மரண நிகழ்வு பூசையில்கூட சமஸ்கிருதம்!

உலகிலேயே தன்னுடைய மொழியைவிட இன்னொருமொழியை புனிதம்....மந்திரசக்தி என்று கதையளக்கின்ற இனம் இருக்குமென்றால் அது தமிழினம் தான்!

உலகிலேயே தன்னுடைய மொழி அல்லாத இன்னொருமொழியில் பாடி ஆடி குதுகளிக்கும் என்றால் அது தமிழினம் தான்! கேட்டால் இசைக்கு மொழியில்லை!!!!

மெத்தப்படித்த ஒரே இனத்தைச் சார்ந்த இரண்டுபேர் தமதுமொழியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடினால் அது தமிழினம் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை!

காதலை சங்கத்தமிழர் கொண்டாடினர். ஆனால் இன்று.....காதலைச் சொல்லக்கூட தமிழை பயன்படுத்த மறுக்கின்றனர் திரையிலும் நடைமுறையிலும்! ஆக; தமிழுக்கு தமிழரிடத்தில் மதிப்பே இல்லை!

இப்போது சொல்லுங்கள் தமிழனுக்கு தமிழ் எதற்கு?

அடப்போங்கோ.....தமிழன் இப்படி உணர்ச்சிபூர்வமாக ஏதேனும் இருந்தால் படித்து ஒருகணம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டு, ஏதேனும் சமாதனம் சொல்லி தன்வேலையை பார்க்கத்தொடங்கிவிடுவான்!

Saturday, May 16, 2009

தமிழே,புதுவிதி எழுது!!!!!!!!!!!!

விதி எழுதியபிரம்மனே,
தமிழின் விதியென்ன
சொல்வாயா?
ஈழ வளநாட்டில்
வாடும் தமிழுக்கு
விடை சொல்வாயா?

பக்தி மொழி
பாழடைவது அழகாகுமா?
பரமனின் மொழி
பரதேசியாகலாமா?

பிரம்மனே!
கலைமகள் வீணையில்
தவழுவது தமிழில்லையா?
திருமகள் வாசம்
தமிழுக்கு இல்லையா?
மலைமகள் மறம்
தமிழைவிட்டு நீங்கிடுமோ?

விதி எழுதிய
பிரம்மனே,
என்தமிழின் விதி
என்ன?

விதியை மதியால்
வெல்லும் திறம்
தமிழுக்கு உண்டு!!!!!!
மூவேந்தரை பெற்றெடுத்த
மறத் தமிழுக்குண்டு!!!!!!!!

இறை நம்பிக்கையில்
உலகில் உள்ள
கடவுள்கள் யாவும்
வாழுகின்ற மொழியென்ற
ஓர் நம்பிக்கையில்
என் தமிழின்
விதியை உம்மிடம்
கேட்க வந்தேன்!

என் தமிழை
காக்க வரம்
வேண்டுகின்றேன்!

பிரம்மனே,
முடிந்தால் உதவும்!!!!!
ஆரியத்து பூசையில்
மகிழ்ந்தால் கலைவாணியின்
வீணையை தூக்கி
எறிந்துவிடும்!

மணி வாசகரின்
திருப்பள்ளி யெழுச்சிக்கு
பார்ப்பான் இட்ட
தடையால்,
தூங்கிக் கொண்டே
இருக்கின்றார் தமிழ்ப்பெருமான்!!!

"எம்மைக் காப்பேன்"என்ற
திருவரங்கன்,
வைகுண்டத்தில் ஆழ்வார்
தமிழைக் கேட்காததால்
தமிழுணர்வு இழந்து
தமிழன் என
மறந்து ஆரியனாகி
கரே ராமாவாய்ப்
போய்விட்டார்!!!!

தமிழ்க் கடவுள்
நல்லூரான் சமசுகிரதபாசையால்
தமிழை நீசமாகக்
கருதிவிட்டாரோ?
கோட்டையின் வாரிசு
கட்டிய கோயில்
என நன்றிக்கடன்
செய்கிறாரோ??????
சூரன்போர் இனி
நடந்தென்ன? விட்டென்ன?

தமிழ் பெற்றெடுத்த
கடவுள்களே கைவிட்டால்??????

தமிழே,உன் விதியை
நீயே எழுது!!!!!
மதி கொண்டு
புதுவிதி எழுது!!!!!!!!!!!!

Wednesday, August 20, 2008

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?

ஈழத்தமிழர் வாழ்வியலை தலைப்பின் கருப்பொருளாய் கொண்டு கட்டுரை எழுத்தினால் அரசியல்வாடை அடிப்பதை தவிர்க்கமுடியாது.அதுதவிர்க்கமுடியாதது. தவிர்த்தால் பார்ப்பனீய ஊடகங்களைப்போல் என் எழுத்தும் தமிழால் சபிக்கப்பட்டுவிடும்.எனினும் அரசியல் வாடையைக்குறைக்க இந்த கட்டுரையில் விரும்புகின்றேன். எல்லாம் நல்லதற்கே!

நரகம் உண்டா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் இருக்கட்டும் ஒருபக்கம். நரகத்தைக் பார்க்கவிரும்பினால் வாருங்கள் இலங்கைக்கு. இங்கு தமிழர் நரகத்தில் வாழுகின்றனர் சொர்க்கத்தை உருவாக்கும் கனவில். உளியை எந்தி சிலர் சொர்க்கத்தை செதுக்கும் சிற்பிகளாய் நிற்கின்றனர்.
இதுதான் இலங்கையில் தமிழர் எனும் என் விளக்கம். பொருள் புரிந்தால் அப்பாடா என்று ஒரு பெருமூச்சு!

அதுசரி எங்கள் புலம்பெயர்ந்தோர்? அதுதானே என் எழுத்தின் நோக்கம் இப்போது.
ஆண்ட இனம் அடிமையாய் எங்கும். புலம்பெயர்ந்தவன் அகதி எனும் அடைமொழியில் அல்லல்படும் அவதி தனிக்கதை. தமிழன் மீது பாய்கின்ற பொருளாதார ஆயுதங்களை பொடிப்பொடியாக்க இவன் இரத்தத்தை பணமாக்கி உறவுகளுக்கு அனுப்பும் ஒருசாரார். குடும்பமாய் குடியேறி நிம்மதி தொலைத்து தென்னைமரத்தடியில் நுங்கு குடித்து நல்லூர் திருவிழாவில் பிரதிட்டை அடித்த அந்த பழைய நினைவுகளுடன் ஒருசாரார். இப்படி இப்படி பல வகைப்படுத்தலுள் ஈழத்தமிழினம் வாடுது புலம்பெயர்ந்து.
இவர்கள் சந்ததி? ஒரு மயூரன் இரண்டு மயூரன் இப்போது இருக்கிறான் அடுத்த சந்ததி எனும் அடைமொழிக்குள் தமிழ்மானத்துடன்.
கேட்கும்போது ஆனந்தமாயுள்ளது. (இதுயாரடா அந்த மயூரன் என்று என்னைக் கேட்காதீர்கள்............இறுதி உலகக்கிண்ண துடுப்பாட்டத்தை பார்த்தவர்களைக் கேளுங்கள்)

ஆனால் அதற்கடுத்த சந்ததி? எனக்கு தெரிந்ததற்கு புலம்பெயர்ந்துவாழும் அடுத்தசந்ததியை சேர்ந்தோரில் பலருக்கு தமிழ்மொழியில் எழுதத்தெரியாது.சிலருக்கு தமிழ் கதைத்தால் விளங்கும்.ஆனால் கதைக்கத்தெரியாது. அப்படியானால் எங்கே போகப்போகின்றது எங்கள் நாளைய சந்ததி?
உண்மையைச் சொன்னால் எனக்கு புலம்பெயர்நாடுகளில் தமிழ்கல்விப் கற்பித்தல் எவ்வளவுதூரம் வரவேற்கப்பட்டுள்ளதென்று தெரியாது.ஆனால் தமிழ் பயிலுவோர் சொற்பம் என்பது புரிகின்றது.

உலகில் ஒரே ஒரு இனந்தான் உள்ளது தன் இனத்தை இனப் பண்பாட்டைப்பற்றி அக்கறையற்றதாய். அது எங்கள் தமிழினந்தான். இன உணர்வாளர்கள் என்னை மன்னிக்கவேண்டும்.
ஆனால் உண்மையிதுதான். இன உணர்வாளர்கள் எனும் அடைமொழி உருவானது எதனால்? ஆயிரம்பேரில் ஒருவன் விசித்திரமானவன் விநோதமானவன் எனின் அவனுக்கு இயல்பாக அடைமொழி அவனுடைய இயல்போடு இணைந்து உருவாவது இயல்புதானே! ஐந்து நண்பர்களில் ஒருவர் சற்று பருமனாக இருந்தால் "குண்டா" என்று செல்லமாக மற்றைய நண்பர்களால் அழைக்கப்படுவதுயில்லையா? அதுபோல்த்தான் இதுவும். ஆறரைக்கோடி( இப்போது எவ்வளவு என்று தெரியாது) தமிழகத் தமிழர்களில் குறிப்பிட்ட சிலரையே இன உணர்வாளர்கள் எனும்போது எங்கள் தமிழினத்தின் தமிழ்ப்பற்றை இன்னும் சொல்வதற்கில்லை.அதிலும் சிலரின் தமிழ்வேடம் மாநிலத்திற்குள் மட்டும் தான். ரஜனிரை எதிர்க்கமட்டும்தான் தமிழ் உணர்வுவரும்.( சரத்குமாரைத்தான் சொல்லுகின்றேன்...........என்னடா புது வில்லங்கம் என்று தோன்றுதா? அவர் பெயரில் தலைப்பிட்டு புது கட்டுரையில் சந்திகின்றேன்.அதுவரை மண்டையைப்போட்டு குழப்பாமல் சிந்திக்கவும்.)

சரி......சரி........புலம்பெயர்தமிழரிடமே வருகின்றேன். தமிழ் உணர்வு உள்ளத்தோடு உறவாடவேண்டும். ஆனால் எனக்குத்தெரிந்த இரண்டு பாட்டிமார் தாம் சந்திக்கும் போது தமிழை மறந்துவிடுவது அவர்களது நோய். ஆங்கிலத்தில்தான் கதைப்பர். நான் நினைத்துக் கொள்வது ஓகோ இவர்கள் "ஸ்போக்கின் பிரக்ட்டிஸ்" பண்ணுகிறார்கள் என்று. இதே நோய்தான் புலம்பெயர்ந்த குடும்பங்களில் உள்ள பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது. "எங்கட புள்ள இங்கிலிசுல படிக்குதுல்லே" என்று நினைப்பதில் பெருமை. சரி ஆங்கிலத்தில் படிப்பது பெருமையாகவே இருக்கட்டும்.தமிழில் வீட்டிலே கதைத்தால்தான் என்ன? தமிழில் வீட்டில் கதைப்பதுமட்டும் போதாது. தமிழை படிக்கவைக்கவேண்டும். தமிழ் வரலாற்றை தெரியவைக்கவேண்டும். இலக்கணம், இலக்கியம் முறையாக படிப்பித்தல் வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்கும் உங்கள் பிள்ளைக்கு தமிழில் தேர்ச்சியிருந்தால் எத்தனை எத்தனை சேர்.பொன்.இராமநாதன்கள் உருவாக வாய்ப்புண்டு. இதுபோல் டோச்சு,பிரான்சு என்று தமிழும் பல மொழிகளில் வளருமே!

பெற்றோரே, தமிழை அறியாத பிள்ளைகள் தாய்ப்பாசத்தை உணர்வார்கள் என்று கனவு காணாதீர்கள்."மொழியபிமானம் சமய அபிமானம் இல்லாதவர் வாழ்வும் ஒரு வாழ்வா" தாமோதரம்பிள்ளையார் சாடுவது உரைத்தால் தமிழினம் மோட்சம் பெறும். அதுவரை தமிழின உணர்வாளர் எனும் அடைமொழி ஒருசிலரை அலங்கரிக்கத்தான் செய்யும். ஆனால் நான் கெஞ்சுவது அந்த அடைமொழியை வேடதாரிகளுக்கு வழங்கிவிடவேண்டாம் என்பதே.

Sunday, August 17, 2008

தமிழும் துரோகமும்

அப்படியாம் இப்படியாம்
உப்படியாம் என்று
ஆயிரம் சேதிகள்
பழந்தமிழ் நிலம்
பற்றி!

பெருமை.........!
பெருமை.........!
பெருமை.........!

வேங்கடமும் இன்றில்லை!
கதிர்காமத்தில் ஓமுக்கே
இடமில்லை!
புத்தளமும் இழந்த
மாதிரித்தான்!
சென்னை தமிங்கில
நாடாகும் புதினம்
பக்கத்தில்த் தான்னுள்ளது!
போகப் போகப் தமிழ்நிலம்
கரைந்து போகுது!

சுனாமியோ கடலரிப்போ
அல்ல!
கயவர்கள் விட்ட
விடுகின்ற தவறுகளால்!
தமிழா நீ
திருந்தவே மாட்டாயா..........? ************************************************************************************** துரோகத் தமிழா........!
உன் கொப்பனின்
குருதி தமிழின்
வம்சமா?
அன்றி உன்
கோத்தையின் முந்தாணை
தமிழிடம் இல்லையா?

தரணியில் எத்தனை
இனமுண்டு!
இந்த தமிழினம்
ஒக்க ஓரினம்
இல்லை!

பத்துப்பேரில் ஒருவன்
துரோகி!
எப்படி இந்த
மலிவு?

விபூடணன்...........
எட்டப்பன்............
காக்கைவன்னியன்..........
அப்பப்பா...........!

நேற்றும் இருந்தது
இன்றும் உண்டு
நாளையும் இருக்கும்!
மலிவோ மலிவு
பத்தில் ஒன்றென்ற
மலிவு!

தமிழ் தாயின்
கரு வறையில்
என்னதான் குறை.....?

மறவர்கள் பூக்கும்
கருவறையில் புழுக்களின்
பிறப்பு எப்படி?
ஐயகோ!
என் தாயின்
கருவறையில்
என்னதான் குறை.........?! ************************************************************************************

Thursday, August 14, 2008

தமிழ்

***********************************************************************************
அந்த சிவனின்
மகளே
என்னை யாளும்
தமிழே

தமிழகம் உன்
மாராப்பு!
ஈழம் உன்
பாவாடை!
இல்லை இருக்கு
சர்ச்சைக்கு இடமளிக்கும்
இடை-இராமன்
இட்ட பாலமோ!

***********************************************************************************

யாழ் என்று
பறைகையிலே தேன்
பாயுது நாடி
நாள மெங்கும்!

மட்டு நகர்
என்றதுமே மறம்
மெய்யில் ஊறுது!

திரு கோண
மலை சிவனருளை
என்னுள் கூட்டுது!

வன்னி என்றதுமே
தமிழ் காப்பகமாய்
மலர்ந்துள்ள நிதர்சனம்
என்னைத் தலைநிமிர
செய்யுது!

புத்தளம் என்றதுமே
தமிழ் முத்துகள்
தோன்றுது!

ஈழத்தின் வடகிழக்கு
என்றதுமே என்
அணுவெல்லாம் புல்லரிக்குது!

*************************************************************************************