Sunday, August 17, 2008

தமிழும் துரோகமும்

அப்படியாம் இப்படியாம்
உப்படியாம் என்று
ஆயிரம் சேதிகள்
பழந்தமிழ் நிலம்
பற்றி!

பெருமை.........!
பெருமை.........!
பெருமை.........!

வேங்கடமும் இன்றில்லை!
கதிர்காமத்தில் ஓமுக்கே
இடமில்லை!
புத்தளமும் இழந்த
மாதிரித்தான்!
சென்னை தமிங்கில
நாடாகும் புதினம்
பக்கத்தில்த் தான்னுள்ளது!
போகப் போகப் தமிழ்நிலம்
கரைந்து போகுது!

சுனாமியோ கடலரிப்போ
அல்ல!
கயவர்கள் விட்ட
விடுகின்ற தவறுகளால்!
தமிழா நீ
திருந்தவே மாட்டாயா..........? ************************************************************************************** துரோகத் தமிழா........!
உன் கொப்பனின்
குருதி தமிழின்
வம்சமா?
அன்றி உன்
கோத்தையின் முந்தாணை
தமிழிடம் இல்லையா?

தரணியில் எத்தனை
இனமுண்டு!
இந்த தமிழினம்
ஒக்க ஓரினம்
இல்லை!

பத்துப்பேரில் ஒருவன்
துரோகி!
எப்படி இந்த
மலிவு?

விபூடணன்...........
எட்டப்பன்............
காக்கைவன்னியன்..........
அப்பப்பா...........!

நேற்றும் இருந்தது
இன்றும் உண்டு
நாளையும் இருக்கும்!
மலிவோ மலிவு
பத்தில் ஒன்றென்ற
மலிவு!

தமிழ் தாயின்
கரு வறையில்
என்னதான் குறை.....?

மறவர்கள் பூக்கும்
கருவறையில் புழுக்களின்
பிறப்பு எப்படி?
ஐயகோ!
என் தாயின்
கருவறையில்
என்னதான் குறை.........?! ************************************************************************************

2 comments:

Fantastic Brother!!! Sorry to post it in English, would you mind if I post this poem in some other Tamizh blogs?

மன்னிக்க. பல நாட்களாக தங்களின் பின்னூட்டம் என் கண்ணில் இருந்து தவறிவிட்டது. என் கவிதை என் உணர்வில் தோன்றியது. அது மக்களை சேர வேண்டும் என்பதே என் நோக்கம். எப்படி என்று அல்ல. என்வே தாங்கள் இதனை பயன்படுத்தலாம். ஆயினும் எங்கு பயன்படுத்துகின்றீர்கள் என்று அறியத்தருவீர்களாயின் நன்மை பயற்கும். நன்றி.