Wednesday, January 18, 2012

சங்கத்தமிழை இழிவுபடுத்தும் சங்கர்!!!!!

நண்பன் சங்கரின் ஆளுமைக்குரிய படமா இல்லையா என்ற பட்டிமன்றம் இதுவல்ல!!!! அதில் எனக்கு ஈடுபாடும் இல்லை!!!! ஆனால் ஆளுமைமிக்க சங்கர்......அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திரையுலகைப் பயன்படுத்தும்போது ஏன் தான் கவனக்குறைவாக இருக்கின்றார் என்னும்போது வருத்தமாகத்தான் இருக்கின்றது. கவனக்குறைவா? சமூக அக்கறையீனமா? ஒருமுறைவிட்டால் தவறு....தொடர்ந்து செய்தால்?

சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்று இலக்கியபெயர்களை நகச்சுவைக்கு பயன்படுத்தினார்!!! தமிழ் பொறுமை காத்தது!
குறித்த கதாப்பாத்திரங்களை கருமைநிற பெண்களாக காட்டியிருந்தாலும் அதில் குறையொன்றும் இல்லை.....ஆனால் கருமைநிறத்தை கேலிக்குரியதாக காட்டியிருந்தமையை எண்ணி வெட்கப்படவேண்டி இருந்தது!!!!

நண்பனில் நடிகர் ஜீவாவின் தங்கையாகத் தோன்றுபவரை கருமைநிறம் உடையவராகவும் கேலிக்குரிய தோற்றமுடையவராகவும் காட்டி சங்கர் தனது கீழ்த்தரமான புத்தியை திரையுலகில் பதிவுசெய்தமையை என்னவென்று சொல்வது? இவ்வளவு ஆளுமைமிக்க ஒரு இயக்குனர் இப்படி சமூகப்பொறுப்பு இல்லாதவராக இருப்பது தமிழ்திரையுலக்கு யார்விட்ட சாபத்தின் விளைவோ?
அங்கவை சங்கவை என்னும் இலக்கியப்பெயர்களை கேலிப்பெயர்களாக சித்தரித்தவர்.......பஞ்சவன் பாரிவேந்தன் என்னும் இனிய தமிழ்ப்பெயரை இலியானாவின் இழவுவாயைக் கெட்டு "அசிங்கமான' பெயராகவும் நவீன உலகிற்கு அழகற்ற பெயராகவும் பத்துத்தடவை சொல்லவைத்து நல்லதமிழ் பெயர்களை கேவலப்படுத்துகின்றாரே.....சங்கர் உண்மையிலேயே தமிழகத்தில்த்தான் பிறந்தாரா?

கொசப்சி பசப்புகல் என்று வாயில் நுழையாத ஒருபெயரை விஜயின் உண்மையான பெயர் என்று தெரிந்ததும் இலியானா குதுகலிப்பதுபோல் காட்சியமைத்த சங்கர் உண்மையில் தமிழுலகுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகின்றார்.....? எல்லோரும் ஜேம்ஸ்...ஜோன்ஸ்....பீட்டர்....ஜூட்...இப்படி பெயர் வைப்பதே நவீன உலகிற்கு ஏற்புடையதென்று சொல்ல துடிக்கின்றாரா?

கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்னும் இத்தாலிப் பாதிரியார் "வீரமாமுனிவர்" என்று தனது பெயரை மாற்றினாரே? அப்படிப்பட்ட அருமையை உடைய தமிழுலகுக்கு இவர் சொல்லும் செய்தி..ஐயகோ!!!!!!

"பாரி..பூரி என்று" பாரி என்னும் அருமையான இலக்கியப் பெயரை கிண்டல்செய்து இலியானா தனது இழவுவாயால் சொல்லும்போது தமிழர் கைதட்டி இரசிக்கும் இழிநிலை?
ஏனெனில் விஜய் என்னும் மாவீரனின் தொண்டர்கள்...படத்தில் பிழைபிடிப்பதை எப்படி இரசிப்பர்???

தமிழக அரசு வரிவிலக்குவேறு வழங்கி பெருமைப்படுத்துகின்றது.......கடவுளே...தமிழர் புத்தாண்டையே மாற்றிய கேவல அரசு நாட்டை ஆளுகையில் இதெல்லாம் சாத்தியம்தான்!!!! (கேவலம்=அதிமுக=திமுக=தேதிமுக)

அதுசரி....இந்தப்படத்தில் இப்படியெல்லாம் தமிழ் சிதைக்கப்பட்டிருந்தும் தமிழ் தலைவர்கள்....தமிழறிஞர்கள்......எவருமே எதிர்த்து குரல்கொடுக்கவில்லையே....குறித்த வசனங்களை நீக்கச்சொல்லி நீதிமன்றம் நாடவில்லையே.....என்ன கொடுமை சரவணா!!!! உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம்.....என்று ஆயிரம் தமிழ் அமைப்புகள் இருந்தும் என்ன பயன்????

இந்திய ஜனநாயக கட்சி என்றொரு கட்சியை அவமானப்படுத்தும் படி படத்தில் ஏதோ சொல்லப்பட்டுள்ளது என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றது ஒருகூட்டம்!!! அது என்ன கட்சி? எனக்கு இப்போதுதான் அப்படியொரு கட்சி இருப்பதே தெரியவந்தது!!! ஆனால் தமிழே அவமானப்படுத்தப்பட்டுள்ளது!!!! யாரும் ஒரு அறிக்கைகூட விடவில்லையே??? கொடுமை!!! கொடுமை!!!!கொடுமை!!!! அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்ககூடாது கடவுளே!!!!!

விஜய் இரசிகர்களே,
விஜய் படமென்றாலும் சரி...ரஜினி படமென்றாலும் சரி....தமிழை கலங்கப்படுத்த முனையாதவரைக்கும் அவற்றுக்கு வாழ்வு என்று பறையுங்கள் தமிழை தாயிலும் மேலாய் கருதினால்!!!!!!