Showing posts with label தமிழ் திரைப்படம். Show all posts
Showing posts with label தமிழ் திரைப்படம். Show all posts

Sunday, December 11, 2011

தமிழ் திரைப்பட நடிகர்களும் நம் சனங்களும்!!!!

இந்தக் காணொளியை தற்செயலாக அவதானிக்க வேண்டி வந்தது. காணொளியை பார்த்ததும் ஆச்சரியப்படவில்லை! நம்மவரின் முட்டாள்த்தனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக திரைப்பட நடிகர்களை பாராட்டத் தோன்றியது! நீங்களும் ஒருதடவை பார்த்துவிட்டு மீதிப்பகுதியைப் படிக்க.



திரைப்படக்காரர்களுக்கு பிழைப்புத்தான் முக்கியம் என்பதை நம் சனங்கள் புரிந்து கொள்ளும் காலம் எப்போதோ? கப்டன் என்பார்.....எந்த இராணுவத்துக்கு என்றால் முழிப்பார்! இளைய தளபதி என்பர்.....எந்தப் படைக்கு என்றால் திணறுவர்! தல என்பர்........என்னத்தை சாதித்த தலைவர் என்றால் மௌனிப்பர்!

பிழைப்புக்காக இங்கொன்று அங்கொன்று என்று இடத்துக்கு ஏற்றாற்போல் பேசி வயிற்றுப்பிழைப்பு நடத்தும் கூட்டத்தை தலையில் கொண்டாடும் சமூகத்துக்கு விடிவுவர வாய்ப்புண்டோ?

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள திரைப்படத்துறை அதனுடைய அரசுக்கு முழு ஆதரவையும் தெரிவித்து இருக்க; தமிழக திரைப்பட நடிகர் பட்டாளம் சமரத்தொனியில் ஆலோசனை கூறும் அருமையில் ஒழிந்திருக்கும் பெருமை என்ன என்பதை நம்மவர் தெளிந்து கொண்டால் நடிகர்களுக்கு பால் ஊற்றி நீராட்டும் இரசிகப்பெருமக்கள் வாடுவர்! அது திண்ணம்!

எங்கே தமது திரைப்படங்களுக்கு கேரளாவில் சிக்கல் வந்துவிடுமோ என்ற பேதிமாத்திரை வயிற்றுள் சென்ற விளைவுதான் "சமரசத் தொனியில்" ஆலோசனை வழங்கும் அரும்பெரும் பண்புக்கு காரணம்!!!!! ஆனால் கேரள திரைப்படத்துறையினர் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவே இல்லை பார்த்தீர்களா? அதுதான் கேரளா இந்தியாவில் உரிமையுள்ள மாநிலமாக விளங்க காரணம்!!!!!
இந்தியா அரசியலை தீர்மானிக்கும் மாநிலமாக விளங்க காரணம்!!!

எங்கள் சனங்கள் திருந்துவார்களா? சூரியன் மேற்கில் உதிக்குமா?