Monday, August 24, 2009

சேரனுக்கு தமிழ்த் திமிருங்கோ!!!!!!

வார இதழ்களில் வெளியான திரைவிமர்சனங்களில் "நீளும் கடிதங்கள் தூக்க மாத்திரைகள்" என பொருள்பட ஒருசிலவற்றிலும் தரமான இயக்குனர் சேரன் என சேரனின் புகழை ஏனைய சிலவற்றிலுமாக பொக்கிசம் தீட்டப்பட்டிருக்க;
திரையில் பார்க்க இரவு நேரக் காட்சிக்கு சென்றிருந்தேன். கந்தசாமி பார்க்கும் ஆவலைவிட பொக்கிசம் பார்க்கும் ஆவலே மேலிட்டிருந்தது. காரணம் சேரனின் திறமைகள்!


உண்மையிலேயே ஒரு இலக்கியம்-பொக்கிசம். படம் முடிந்தபோது திரையரங்கை சுற்றிப் பார்த்தேன்.படம் பார்க்க வந்திருந்த கூட்டம் ஐம்பதைத் தாண்டாது. நித்திரையில் ஆழ்ந்த மூஞ்சிகள் ஒருசில இருக்கத்தான் செய்தன.

தமிழ்த் தேன் வடிகின்ற கடிதங்களை நாயகனும் நாயகியும் பரிமாற்றுவதை திரையில் கொண்டுவரும்போது "இனிய தமிழ்" தூக்கத்தை ஊட்டினால், கம்பனும் இளங்கோவும் பாடிய தமிழை திரையாக்கினால் ஒருநாள்கூட படம் ஓடாது என்பது உறுதி!

நல்ல முயற்சி;ஆனால் இரசிகர்களின் இரசனை இன்று இலக்கியத்தில் இல்லை. எக்ஸ் மச்சி வை மச்சி என்றும் எக்ஸ் கியூஸ் மி மிஸ்டர் கந்தசாமி ஒரு கோபி குடிப்போம் கம் வித் மி கோட்ட கூளா நீயே தொட்டுப்பாரு" பாடினால்தான் படம் ஓடும் என்கிற காலத்தில் இலக்கியங்களை அரங்கேற்றுவேன் என துடிக்கும் சேரன் தமிழ்த் திமிர் கொண்டவர்தானே? பின்ன என்னங்க தமிழ் திரையுலகை இலக்கியத்தால் நிரப்ப முயல்கிறார் என்றால் "தமிழ்த் திமிர்" தானே சேரனுக்கு?

5 comments:

Cheran is a good director. At present to get success he needs to concentrate either direction or acting.

ஒரு படத்திற்கு முக்கிய தேவை, திரைக்கதை என்னும் திரைமொழி. அதை கையாளத் தெரியாத சேரன், என்ன இலக்கியம் எடுத்து என்ன பிரயோசனம்? மேலும் இந்த படம் ஒன்றும், சேரனின் சொந்த உழைப்பு அல்ல. 'The Classic' என்னும் கொரியன் திரைப்படத்தை அப்படியே தழுவி எடுத்த படம் இந்த படம்...

சேரன் நல்ல இயக்குனர்தாங்க, ஆனா நடிக்கும்போது அழுக ஆரம்பிசாருன நிருதமாட்டேன்கராருங்க

தோழர்களே, கருத்துகளுக்கு நன்றிகள்