காவேரியில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விலகவில்லை!
ஒக்கேனக்கலில் உரிமைநிலைநாட்ட விலகவில்லை!
ஈழத்தில் இரத்த ஆறு ஓடியதற்காக விலகவில்லை!
அட; வெறும் ஆட்சிப்பங்கீட்டுப் பிரச்சினையால் விலகுகின்றார்கள் இந்த திருத்த முடியாத கழுதைகள்! தமிழா.......உன் நிலையைப் பார்த்தாயா? காவேரி,ஒக்கேனக்கல் என்று உன் உரிமைகளை நிலைநாட்ட இவர்கள் விலகவில்லை! அட சீ! முத்துக்குமார் உட்பட்ட பலர் தீயில் வெந்தபோது விலகவில்லை! மீனவர்களின் பிணங்கள் தமிழகக் கரைகளைத் தொடர்ந்து தொட்டபோதும் இவர்கள் விலகவில்லை! இலங்கையில் இரத்த ஆறு பெருகி ஓடியபோதும் இவர்கள் விலகவில்லை! அப்போதெல்லாம் வெறும் கடிதம் எழுதுவதுடன் எல்லாமே முடிந்துபோயிற்று!
தமிழா, உன் உரிமையில் இவர்களுக்கு நாட்டமில்லை! உன் உயிரிலும் இவர்களுக்கு நாட்டமில்லை!
ஒக்கேனக்கல்(அனைவரும் மறந்துவிட்டார்கள் இந்தப்பிரச்சினையை!) பிரச்சினையில் சிலகாலம் பொறுத்திருப்போம் என்று கூறி தமிழரை அமைதிசெய்து காங்கிரசுக்கு மத்திய அரசுக்கு இடைஞ்சல் ஏதுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார். சிறிதுகாலம் பெருங்காலமாகி ஆட்சியும் முடிவுக்கு வந்தாயிற்று! தமிழரே.......மீண்டும் இவர்கையில் ஆட்சியைக் கொடுத்து; இன்னும் ஏமாறாதீர்!
திமுக= திருத்த முடியாத கழுதைகள்
திக=திருந்தாத கழுதைகள்
அதிமுக=அடிச்சும் திருத்த முடியாத கழுதைகள்
திருமாவளவன் கட்சி= விலைபோன எலிகள்
காங்கிரசு = காலன் (எம் இனத்தின் எமன்)
ராமதாஸ் கட்சி= தமிழர்களுக்கு மறக்கவைக்கும் மருந்தைக் கண்டறிந்த மருத்துவர் கூட்டம்!
இதில்; இனமே அழிந்து கொண்டிருந்தபோது அழித்தவர்களுக்கு சாமரைவீசிக்கொண்டிருந்த தி.மு.கழுதைகளுக்கு இப்போது நல்லதொரு பாடம் புகட்டுங்கள்! அது ஏனைய கட்சிகளுக்கும் பாடமாக அமைய வாய்ப்பை உருவாக்கும்!
தமிழர் தலைவர் என்று பட்டங்களில் பற்றுக் கொண்ட வீரமணியர் ஏதேனும் அறிக்கைகளை விடுவார்! கவிப்பேரரசு என்ற பட்டப்பற்றுப் பேரரசு வைரமுத்து கவிதைகள் பல எழுதி தினகரனில் வெளியிடுவார்! தமிழர்களே.......மயங்கிடாதீர்!
10 comments:
விஜயகாந்துக்கு ஓட்டு போடச் சொல்றீங்களா? :)
இலங்கையில் இரத்த ஆறு பெருகி ஓடியபோதும்.....
வன்முறையை தேர்ந்தெடுத்தால் என்ன ஆறு ஓடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
பாசமுள்ள அனோனிம்சுக்கு,
சுபாஸ் சந்திரபோஸ் என்ன ஆயுதத்தை எடுத்தார்? காந்தியின் அகிம்சையால் இந்தியா சுதந்திரம் பெற்றதென்று நினைத்தால்; வரலாறு தெரியாத கிணற்றுத்தவளையே தாங்கள் எனத் தெளிக.
அதுசரி; வன்முறை என்றால் என்ன?
:-)
அடுத்தமுறை வந்தால்; தயவுசெய்து வன்முறைக்கு விளக்கம் தருக. அனோனிமசாக முகமூடி அணிந்து எழுதத்தேவையில்லை......ஏனெனில் வன்முறையாளர்கள் தற்போது எவரும் இல்லையே?
@அப்பாதுரை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
விஜயகாந்தும் திரையில்தான் நாயகன்!!!!
அடுத்த கட்ட நடவடிக்கை,இலங்கைத் தமிழர்களின் மேல், திடீர்ப்பாசம்.
@உருத்திரா
சரியாக சொன்னீர்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
sariyaaga solleyirukkiraar..but tamilan thiruntha maaddaargal....
அட மறுபடியும பழைய கதைதான். இப்போதே தமிழகம் யார் என்ன இலவசம் அதிகமாக கொடுப்போகின்றார்கள் என்று நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் இனம் மானம் பாசம்....! அவர்களுக்கு எல்லாம் நாற்காலி ஆசை இவர்களுக்கு எல்லாம் இலவச ஆசை இதில் வேறேதை எதிர்பார்க்கலாம்?
இந்த பண பேய்களான இன துரோகிகளை மக்கள் மத்தியில் கிராமம் தோறும் வீடு வீடாக சென்று மக்களுக்கு புரிய வைத்து ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் . டீ கடை , திண்ணை பேச்சுகள் எல்லாவற்றிலும் கருணாநிதியின் கொட்டத்தை தோலுரிக்க வேண்டும் . இன்றே தொடங்குவோம்
@ Suresh Kumar
நன்றே நவின்றீர்கள். நல்லதே நடக்கும் என்று நம்புவோம். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
Post a Comment