Friday, January 14, 2011

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையில் உலக சைவ பேரவையின் இலங்கைக்கிளை வழங்கிய நிதி

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசித்த இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால்மா ஓடிக்குளோன் பேபிசெற் பம்பஸ் உட்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆரையம்பதி சுமுஆ பாடசாலை ஆரையம்பதி மகா வித்தியாலயம் தாளங்குடா விநாயகர் வித்தியாலயம் தாளங்குடா றோ.க.வித்தியாலயம் கிரான்குளம் விநாயகர் வித்தியாலயம் துறைநீலாவணை மகா வித்தியாலயம் துறைநீலாவணை பொதுக் கட்டடம் போன்றவற்றில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

அத்தோடு தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மதிய உணவுக்கும் நிதி வழங்கப்பட்டது. முகாம்களுக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம் மற்றும் பேரவையின் சமூகசேவை பகுதி குழுவினர் முகாம்களின் தேவைக்கேற்ப உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து பேரவை மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் தெரிவித்தார். மாவட்டம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கான உடனடி தேவையை நிறைவேற்ற மூன்று குழுக்கள் பேரவையின் மூன்று தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்களுக்கு பேரவையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மூவரும் பொறுப்பாளராக உள்ளனர். கல்குடா தொகுதியை சேர்ந்த பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் அத்தொகுதிக்குப் பொறுப்பாளராகவும் மட்டக்களப்பு தொகுதியைச் சேர்ந்த பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் அத்தொகுதி பொறுப்பாளராகவும் பட்டிருப்பு தொகுதியைச் சேர்ந்த ந.புவனசுந்தரம் அத்தொகுதி பொறுப்பாளராகவும் ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் தர்மபுரம் முகாம் செட்டிபாளைய பாடசாலை முகாம் களுதாவளை மகா வித்தியாலய முகாம் ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய முகாம் தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய முகாம் மாங்காடு சரஸ்வதி வித்தியாலய முகாம் போன்றவற்றுக்கு சிறுவர்களுக்கான உதவிகள் வழங்க ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக பேரவையின் பொருளாளர் திரு.ந.புவனசுந்தரம் தெரிவித்தார்.

நன்றி:- தமிழ்வின்

http://www.tamilwin.com/view.php?22uIBZ203VjQ64e2OGpDcb3N92gdd3i294bc3XpGce406Qjd02eBLIa2


0 comments: