Thursday, January 13, 2011

பொங்கல் பண்டிகையில் கொண்டாட்டம் வேண்டாம்! நீரில் மூழ்கித் தவிக்கும் தமிழருக்கு உதவுக!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்!
இங்கு வலி பிறந்துள்ளதே!!!
கடற்கன்னிகளின் தமிழால்
நெஞ்சைக் கொள்ளைகொள்ளும்
கிழக்கு ஈழவளநாடு
வெள்ளத்துள் மிதக்க-பொங்குவது
அழகா?
அகதிகளாய் அங்கு
மாந்தர் அலைய -இன்னிசையில்
நாம் மெய்மறப்பின்
எங்கள் உடலில்
ஓடுவது தமிழ்க்குருதியோ?

அலைபேசி தொலைபேசி
கைபேசி என்று
உலகம் சுருங்கிவிட்ட
இக்காலத்தில் மீனவன்
செத்தால் தந்தி -ஆயினும்
மந்திரிபதவி பற்றியதென்றால்
விமானத்தில் டெல்லி!
இப்படியிருக்கும் கொலைஞருக்கு
எப்படித் தெரியும்
கிழக்கு ஈழவளநாட்டில்
வெள்ளத்துள் மூழ்கியுள்ள தமிழரின் நிலை!!!

பொங்கலோ பொங்கல்
என்று சொல்லமனமுள்ளோர்
சொல்லுங்கள்!!!

வாழ்க வளமுடன்!





குறிப்பு:அங்குள்ள தமிழ்மக்களுக்கு உதவவிரும்புகின்றவர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை யை தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

தமிழ்வின் இணையத்தளத்தில் பிரசுரமாகிய இதுபற்றிய தகவல்:
////வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் இம்மக்களுக்கு இயன்றளவு நிதி, பொருள் உதவியை வழங்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.

நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் இலக்கம் 20091 மக்கள் வங்கி கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்ற பெயரில் களுவாஞ்சிக்குடி மக்கள் வங்கி கிளைக்கு அனுப்புமாறு வேண்டுகின்றார்.

இவ்வேளை பொருட்களை வழங்கவும் முடியுமென தெரிவிக்கின்றவர்கள். அவசிய தேவைக்கு 0094776034559, 0094718049439, 0094652228273, 0094652228018 ஆகிய தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். அல்லது தொலைநகல் 0094652228273 என்ற இலக்கத்திற்கும் அனுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்./////


கிழக்கு மாகாண நிலைமை! 502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள்!! வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு

http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjP20N922e4ILBcb3pG02

கிழக்கின் உறவுகளுக்கு, புலம்பெயர் உறவுகளின் உள்ளக் கதவுகள் திறக்கட்டும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள்
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjF20N922e4ILBcb3pGa2


கிழக்கில் 90வீதமான பகுதி வெள்ளத்தில்.. வடக்கில் பொங்கல் விழாவை ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் - சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார்
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI34ei29202jQWdd3Qjb20N922e4ILBcb3pGQ2

அம்பாறை மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI24ei29202jQMdd3QjR20N922e4ILBcb3pGQ2

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQCdd3Qj120D922e4ILBcb3pGY2

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு வைத்தியசாலைகள் மூடப்பட்டன

0 comments: