Thursday, May 7, 2009

தாய்த் திராவிடமே,உங்களின் கைகளுக்கு கிட்டிய எம்மைக் காக்கும் கடைசி ஆயுதம்

என் இனிய திராவிடமே,

வாக்கெனும் வேல்
கொண்டு காங்கிரசை
வீழ்த்து!

ஈழத்தில் தமிழழிய
கூட்டிக் கொடுத்த
திமுகவிற்கு நல்லதொரு
பாடம் புகட்டு!

சூழ்கலி நீங்கத்
தமிழ்மொழி ஓங்க;
உன் வாக்குச் சீட்டைப்
பயன்படுத்து!!

என் ஆருயிர்த்
தமிழகமே,

உன் கையில்
ஈழத் தமிழின்
எதிர்காலம்!
வாக்கும் உன்கையில்த்தான்!
சிந்தித்து செயலாற்று!

கட்சிகள் கடந்து
தலைவர்களைத் தொலைத்து
தமிழ்த்தாய்க்கு வெற்றிகொடு!

என் தாய்த்
தமிழகமே,

வீழ்வது காங்கிரசு
ஆகட்டும்!
சூடுகண்ட பூனையாய்
திமுக திருந்தட்டும்!
வாக்கெனும் வேலால்
நீ வெல்கவே!
வெல்கவே!

2 comments:

இத்தாலி உள் ஆடைகலை குறைந்த செலவில் துவைத்து வுளர்த்த....
கைராசியான ச்தாபனம்:
மு.க&கம்பனி
கோபாலபுரம்
சென்னை

கருணை இல்லா கருணாநிதி கம்பனி இத்தோடு தமிழகத்தில் இருந்து அழிந்து ஒழியட்டும். என் இனிய தமிழகமே, ஈழத்தமிழரைக் கைவிட்டுவிடாதீர்.