ஓ பாரதி தானே?
இன்று பரவலாக தமிழுக்காய் கூடுகின்ற கூட்டங்கள் தொட்டு பட்டிமன்றங்கள்,கட்டுரைகள்,கவிதைகள் என எங்குமே "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகக் கருத்துப் பதியப்படுகின்றது.
எவ்வளவு பெரிய அறியாமை!
பாரதியின் புகழுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கும் அறியாமையே இது!!!!
"புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை – அவைசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லைமெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் "
சொல்லவும் கூடுவதில்லை – அவைசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லைமெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் "
"புதிய தொழில்நுட்பக் கலைகள் எவையும் தமிழ்மொழியில் இல்லை.அவையெல்லாம் மேற்குநாட்டிலேயே உண்டு. இக்கலைகளை தமிழில் மொழிபெயர்க்க எவரும் முன்வருவதில்லை.மொழிபெயர்த்தாலும் முனைப்புடன் சந்ததியர் பயன்படுத்தார். மொழிபெயர்த்தாலும் அத்தொழில்நுட்ப கல்வியை முழுமையாகத் தமிழால் விளக்கப்படுத்த முடியாது.எனவே தமிழ்மொழி மெல்ல மெல்ல அழிந்துபோகும்" என்று எவனோ ஒருவன் பேசியதைக் கேட்ட பாரதியின் நெஞ்சம் கொதித்தது.
இங்கு அவன் சொன்னதில் என்ன பிழை? கவலையில் பரிமாறிய கருத்தாக இருக்கலாம் தானே?
பாரதி கொதித்துப்போகக் காரணம் யாதாக இருக்கலாம்?
தமிழ்மொழிக்கு திறன் இல்லை என்று சொன்னானே-அதுதான் காரணம்!!!
திறன் இல்லை என்று சொல்ல இவன் யார்? சில சமயம் கருணையில்லா நிதியாக இருந்திருக்கலாம்!!!!
எனவேதான்;
"மெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!இந்தவசையெனக் கெய்திட லாமோ?"
என்று பாடுகிறார்.
"என்றெந்தப் பேதை யுரைத்தான்?" என்று மெல்லத் தமிழினிச் சாகும் என்று சொன்னவனை பேதை என்று வசைபாடியுள்ளார் தனது பாடலில்.

அதேநேரத்தில்;சொன்னவன் தொழில்நுட்ப மற்றும் ஏனைய புதிய கண்டுபிடிப்புக்கள் தமிழில் இல்லை என்று சொன்ன கருத்தை ஏற்று, அவற்றை ஈடுசெய்ய,
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் " என்கிறார்.
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் " என்கிறார்.
ஏனைய மொழிகளில் உள்ள புத்தம் புதிய கலைகளை மொழிபெயர்ப்பு செய்யும் வேளை முழுமையாய் தமிழால் பொருளுணர்த்த முடியும்.அத்தகு திறனை எட்டுத் திக்குகளிலும் இருந்து கலைச் செல்வங்களை தமிழுக்கு கொண்டுவரும் போதே இத்தகு பேதைகள் உணர்ந்து கொள்வர்.எனவே இவ்வழி ஒன்றே இப்பேதையின் கருத்து தொடராது இருக்க வழிவகுக்கும்.ஆதலால் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற ஔவையின் குரலுக்கு அமைவாக; எட்டுத் திக்குகளுக்கும் சென்று எல்லா மொழிகளிலும் உள்ள அறிவுச் செல்வங்களை மொழிபெயர்ப்புச் செய்து தமிழன்னைக்கு மாலையாக்கி சூட்டுங்கள் என தமிழ்ச் சமூகத்தை வேண்டுகிறார்.
ஆனால் ஈற்றில் பாரதியே "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று சொல்லிவிட்டதாக செவிவழியாக எல்லோர் நெஞ்சிலும் பதிந்துவிட்டது. பேதை பாரதியானான்!!!
தமிழ்ச் சாதி பாரதிக்குச் செய்த நன்றிக் கடனைப் பார்த்தால் தமிழென்று சொல்லும்போது "தலைகுனிந்து' நிற்கவேண்டியுள்ளது. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்ற திருக்குறள் தமிழ் சமூகத்தைப் பார்த்து சிரிக்கிறது?
பேதை பாரதியாகலாமா?
தமிழ் நன்றிகெட்ட இனமாகலாமா?

சொல்லுங்கள்.
இதோ பாரதியின் பாடல்:-
புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை – அவைசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லைமெல்லத் தமிழினிச் சாகும் – அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!இந்தவசையெனக் கெய்திட லாமோ?சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

என்றந்தப் பேதை உரைத்தான் என்பதற்கு முன்னர் உள்ள வரிகள் இன்னொருவரின் வார்த்தைகளாகவே பாரதி கையாண்டுள்ளதை முழுப்பாடலையும் படிக்கும்போது விளங்கிக் கொள்ளலாம்.
எனவே மெல்லத் தமிழினிச் சாகும் என சொன்னது யார்?
பாரதி அல்ல!!!!!!!!!
பாரதி அல்ல!!!!!!!!!
பாரதி அல்ல!!!!!!!!!
3 comments:
சரியாகச் சொல்லி ஆழப் பதிய வைத்துள்ளீர்கள்!
"ஆ!இந்தவசையெனக் கெய்திட லாமோ?"-- இந்த வசை தனக்கே ஏற்பட்டதாகத் துடித்தவனைப் போய்...
அண்மையில் ஒரு இணைய ஊடகத்தில் "பாரதி சொன்னதாக கருத்து தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.வருந்தினேன்.எனவேதான் தெளிவுபடுத்த வேண்டி பதிவாக்கியுள்ளேன்.தங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி
//"ஆ!இந்தவசையெனக் கெய்திட லாமோ?"-- இந்த வசை தனக்கே ஏற்பட்டதாகத் துடித்தவனைப் போய்...//
ஆகா; அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் தங்கள் கருத்தை.நன்றி
அருமையான பதிவு.. நல்ல விஷயம்..
வாழ்த்துக்கள்.
Post a Comment