Monday, January 12, 2009

கிழக்கு ஈழவளநாடு

கடற்கன்னிகள் தமிழ்பாடும்
வளமான மட்டக்களப்பு
காதல் ஊட்டும்
இயற்கை வனப்பு;
எங்கள் சிவத்தமிழ்
வேந்தன் தொழுத
திருவருள் வாழும்
திருகோணமலை
திரு ஞானசம்பந்தன்
தமிழால் திருவருள்
பொழியும் திருகோணமலை
என்னுள் சிவஞானமூட்டும்
தென்கயிலாயம்;
அம்பாறை-இது
மட்டுநகர் ஈன்றெடுத்த
இன்னோர் மட்டுநகர்
என் நெஞ்சுக்குள்
சிறகுபூட்டும் கொள்ளை
அழகு நகர்
வாழிய தமிழ்
வாழ்க கிழக்கு
ஈழ நாடே!



facebookஇல் கிழங்கிலங்கையின் புகழ்கூட்டும் குழுமத்தில் அபிமானமுள்ளவனாக இணைந்தபின் (Batticaloa எனும் pageஇல் fanஆக இணைந்து)அங்கு யான் பொறித்த தமிழை இங்கு மறுபடி பொறிக்கின்றேன்.

பொதுவாக மீன்பாடும் தேனாடு என்பர்.ஆங்கிலேயருக்கு முன், கடற்கன்னிகள் தமிழ்பாடுவதாகவே கவிகளில் பயன்படுத்தப்பட்டதாகவும் பின்னர் அது மீன்பாடுகின்றதாக மருவிவிட்டதாகவும் படித்த நினைவு உண்டு. அதன் நம்பகத்தன்மையை அறியேன்.ஆனால் கடற்கன்னிகளாயினும் சரி,மீன்னாயினும் சரி மட்டுநகரின் சிறப்பு சிறப்பாகத் தீட்டப்படுவதே முதன்மையானது.

1 comments:

மீன்கள் பாடுவது இப்போதும் சில காலங்களில் உணர முடியும் என்று மட்டுநகர் அன்பர் ஒருவர் குறிப்பிடிருந்தார்.அப்போது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இருப்பினும் மட்டுநகர் இயற்கையின் அழகம்சங்கள் பொருந்தியிருப்பதொடு அதன் மட்டவர்களை விருந்தோம்பும் பண்பும் சிறப்பானதே.உங்கள் கவிவரிகள் சிறப்பு
வாழ்த்துக்கள்

இவை கரவைக்குரல் வானம்பாடி