இந்தக் காணொளியை தற்செயலாக அவதானிக்க வேண்டி வந்தது. காணொளியை பார்த்ததும் ஆச்சரியப்படவில்லை! நம்மவரின் முட்டாள்த்தனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக திரைப்பட நடிகர்களை பாராட்டத் தோன்றியது! நீங்களும் ஒருதடவை பார்த்துவிட்டு மீதிப்பகுதியைப் படிக்க.திரைப்படக்காரர்களுக்கு பிழைப்புத்தான் முக்கியம் என்பதை நம் சனங்கள் புரிந்து கொள்ளும் காலம் எப்போதோ? கப்டன் என்பார்.....எந்த இராணுவத்துக்கு என்றால் முழிப்பார்! இளைய தளபதி என்பர்.....எந்தப் படைக்கு என்றால் திணறுவர்! தல என்பர்........என்னத்தை சாதித்த தலைவர் என்றால் மௌனிப்பர்!பிழைப்புக்காக இங்கொன்று அங்கொன்று...
Sunday, December 11, 2011
Monday, November 28, 2011
தனுசின் கொலைவெறியில் சிக்கிய தமிழ்
தனுசின் கொலைவெறி பாடல் தமிழ்திரையில் தமிழின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் அமைந்திருப்பதை தமிழ் ஆர்வலர் பலர் கண்டித்திருந்தனர். இதற்கு தனுசின் பதிலைப் பாருங்களேன்!"நான் பொழுதுபோக்குத் துறையில் தொழில்புரிபவன். மக்கள் நேசிக்கும், மக்களைச் சென்றடையும் விதத்தில் பொழுதுபோக்கான அம்சங்களைக் கொடுக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். மொழியை வளர்ப்பதற்கு ஏராளமானோர் இருக்கிறார்கள். நான் அந்தத்துறையில் ஈடுபடவில்லை. மக்களின் ரசனைக்கு ஏற்ப காலத்துக்குத் தகுந்த வகையில் பாடலைக் கொடுத்திருக்கிறேன். தமிழாக இருக்கலாம், தெலுங்கு, ஹிந்தியாக இருந்தாலும் மக்கள்...
Sunday, September 11, 2011
"கலைஞர்" என்று சொல்லும் நா நாவோ?
யூடியூப் காணொளிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அருமையான காணொளி என் கண்ணுள் வந்து என்னை பல கேள்வி கேட்டது!!! என் நெஞ்சறையில் நிசப்பதம்! நிசப்பதத்தின் முடிவில் கருணையில்லா நிதியை பெற்ற தாயை திட்டித்தீர்க்கும் கோபம் பெருக்கெடுத்தது! தமிழர் செய்த பாவத்தின் சம்பளம் கருணையில்லா நிதி என்று விதி எழுதியிருக்கையில் அந்தத் தாயை கோபித்து என்ன பயன்? அது என்ன காணொளி? ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெருமகன் திரு.அப்துல்கலாம் ஆற்றிய உரை!!!!!! தமிழுக்கு அங்கு அவர் பெருமை சேர்த்த அழகை எந்தத்தமிழரும் விழா எடுத்து கொண்டாடவில்லையே என்றபோது பெருந்துன்பம்...
Monday, July 18, 2011
தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய பூசைமொழி சமஸ்கிருதம் தமிழருடைய இசைமொழி கர்நாடகமும் தெலுங்கும் சமஸ்கிருதமும் தமிழருடைய நாகரீகமொழி ஆங்கிலம் தமிழருக்கு தமிழ் எதற்கு? தமிழருடைய திருமண நிகழ்வில்கூட தமிழ் இல்லை! ஏன் நாகரீகத்தமிழரின் மாப்பிள்ளையின் ஆடையில்க்கூட தமிழ்சால்பு இல்லை! தமிழருடைய மரண நிகழ்வு பூசையில்கூட சமஸ்கிருதம்! உலகிலேயே தன்னுடைய மொழியைவிட இன்னொருமொழியை புனிதம்....மந்திரசக்தி என்று கதையளக்கின்ற இனம் இருக்குமென்றால் அது தமிழினம் தான்! உலகிலேயே தன்னுடைய...
Friday, May 27, 2011
சுவாமி தூக்குவதிலும் சாதியா? கடவுளே!

தமிழகத்தில் சென்னையிலுள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, சுவாமி வீதிவலம் வந்து கொண்டிருந்தார். சுவாமியை பிராமணர் மட்டுமே மாறிமாறி தூக்கினர். மெதுவாக அங்கிருந்த ஒருவரை சாதரண பக்தர்கள் தூக்கக்கூடாதா என்று கேட்டேன். பிராமணர் சுத்தமானவ்ர்....எனவே தீட்டுப்படாது! ஆனால் ஏனையவர் எப்படி என்று தெரியாதே என்றார். காஞ்சியில் கருவறையில் செய்யாத அசுத்தத்தையா சாதரண பக்தர் செய்துவிடுவர் என்று கேட்க என்னுடைய நாக்கு துடித்தது.ஆனால் அடக்கி அமைதியாகி...
Tuesday, March 22, 2011
முறைதவறிய கர்ப்பங்கள் யாழில் சொல்லும் நீதி என்ன?

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் இன்றும் ஒருசில நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தின் வடு ஆண்-பெண் சனத்தொகை விகிதாசாரத்தில் காணப்படுகின்றது. ஏனெனில் இப்போர்க்காலத்தில் இப்பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டன! இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையிலும் குறைவாகவே இன்னுமுள்ளது. எனவே; ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதும்; விரும்பிய நேரத்தில் விவகாரத்துச் செய்து கொள்வதும்; திருமணம் செய்துகொள்ளாமலே...
Thursday, March 17, 2011
தமிழ்த் தியாகி விநாயகர்!

அனுராதபுரத்தில் 14ம் திகதி பிள்ளையார் கோயிலிலுள்ள பிள்ளையார் சிலையை டயர் போட்டு எரித்த கேவலமான செய்தியை அறிந்ததும் மனவருத்தம் ஏற்பட்டது!திராவிடர் கழகத்தவருக்கு விரோதியாக இருந்த பிள்ளையார் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் விரோதியாகிவிட்டார்! பிள்ளையாரை எதிர்த்து திராவிடம் பேசி; தென்னாட்டு சிந்தாந்தத்தையும் புறக்கணித்து;தமிழர் உரிமைகளையும் துறந்து திமுகவுக்கு சாமரை வீசுவதிலேயே திகவின் காலம் கழிகின்றது!தமிழ்நாட்டில் திகவினர் அன்று பிள்ளையார் சிலைகளை உடைத்து...
Wednesday, March 9, 2011
கருணாநிதியின் மாண்பு!

திமுகவுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் என்று காங்கிரசிடம் மண்டியிட்ட கருணாநிதி கூறியது கேட்டு; மெய் சிலிர்த்துவிட்டது!கர்நாடக மாநிலத்துக்கு ஒக்கேனக்கலையும் காவேரியையும் விட்டுக்கொடுத்த அருமையுள்ள கட்சியல்லவா திமுக!கேரளத்துக்கு முல்லைப் பெரியாறை வாரிவழங்கிய மாண்பு கொண்ட கட்சியல்லவா திமுக!கச்சதீவை இலங்கைக்கு கொடுத்த கொடையாளியல்லவா திமுக!மீனவர்களின் உயிர்களை தாரைவார்த்த பெருந்தன்மைக் கட்சியல்லவா திமுக!ஈழத்தில் தமிழர் வாடியபோது அவர்கள் உயிர்களை...
Sunday, March 6, 2011
தமிழருவி மணியன் ஊதிய சங்கும் கருணாநிதியின் செவிட்டுக் காதும்!
விகடனில் தமிழருவி மணியன் ஐயா கருணாநிதிக்கு எழுதிய மடல் வெளிவந்துள்ளது. இதோ இதுதான் அந்த மடல்.தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு,வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து...
Saturday, March 5, 2011
தமிழரே....என்ன முடிவு எடுத்துள்ளீர்?

காவேரியில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விலகவில்லை!ஒக்கேனக்கலில் உரிமைநிலைநாட்ட விலகவில்லை!ஈழத்தில் இரத்த ஆறு ஓடியதற்காக விலகவில்லை!அட; வெறும் ஆட்சிப்பங்கீட்டுப் பிரச்சினையால் விலகுகின்றார்கள் இந்த திருத்த முடியாத கழுதைகள்! தமிழா.......உன் நிலையைப் பார்த்தாயா? காவேரி,ஒக்கேனக்கல் என்று உன் உரிமைகளை நிலைநாட்ட இவர்கள் விலகவில்லை! அட சீ! முத்துக்குமார் உட்பட்ட பலர் தீயில் வெந்தபோது விலகவில்லை! மீனவர்களின்...
Friday, January 14, 2011
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையில் உலக சைவ பேரவையின் இலங்கைக்கிளை வழங்கிய நிதி
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசித்த இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால்மா ஓடிக்குளோன் பேபிசெற் பம்பஸ் உட்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆரையம்பதி சுமுஆ பாடசாலை ஆரையம்பதி மகா வித்தியாலயம் தாளங்குடா விநாயகர் வித்தியாலயம் தாளங்குடா றோ.க.வித்தியாலயம் கிரான்குளம் விநாயகர் வித்தியாலயம் துறைநீலாவணை மகா வித்தியாலயம் துறைநீலாவணை பொதுக் கட்டடம் போன்றவற்றில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.அத்தோடு தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மதிய உணவுக்கும் நிதி வழங்கப்பட்டது....
குளிரும் வெள்ளமும் மரணப்பொறியாகி வாடிநிற்கும் எம்முறவுகளுக்கு உதவிடுக!!!!
குளிரினால் மரணமடையும் எம்முறவுகள்!!வழமைக்கு மாறாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மற்றும் வாகரைப் பகுதிகளைச் சோ்ந்த ஐந்து போ் குளிரில் விறைத்து நேற்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளனர்.அதிக குளிரினால் உடல் வெப்பநிலை குறைவடைந்ததால் அவர்கள் இறந்திருப்பதாக வாகரை உதவி அரசாங்க அதிபர் ஆர். இராஜகுலநாயகி தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு நகர வீதியில் பிச்சை எடுப்பவராவார்.நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வெப்பநிலை சுமார் 16 பாகையளவிற்கு குறைவடைந்திருந்தது.மட்டக்களப்பு...
Thursday, January 13, 2011
பொங்கல் பண்டிகையில் கொண்டாட்டம் வேண்டாம்! நீரில் மூழ்கித் தவிக்கும் தமிழருக்கு உதவுக!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்!இங்கு வலி பிறந்துள்ளதே!!!கடற்கன்னிகளின் தமிழால்நெஞ்சைக் கொள்ளைகொள்ளும்கிழக்கு ஈழவளநாடுவெள்ளத்துள் மிதக்க-பொங்குவதுஅழகா?அகதிகளாய் அங்குமாந்தர் அலைய -இன்னிசையில்நாம் மெய்மறப்பின்எங்கள் உடலில்ஓடுவது தமிழ்க்குருதியோ?அலைபேசி தொலைபேசிகைபேசி என்றுஉலகம் சுருங்கிவிட்டஇக்காலத்தில் மீனவன்செத்தால் தந்தி -ஆயினும்மந்திரிபதவி பற்றியதென்றால்விமானத்தில் டெல்லி!இப்படியிருக்கும் கொலைஞருக்குஎப்படித் தெரியும்கிழக்கு ஈழவளநாட்டில்வெள்ளத்துள்...
Wednesday, January 5, 2011
கமலின் அந்தரங்க நோயால் அல்லல்படும் ஈழத்தமிழ்

அடுத்தவர் உள்ளத்தை காயப்படுத்தி இன்பம் தேடுவது.......ஆகா; ஆனந்தம் - இதுஒரு நோய்!!!இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் ஆனந்தம் பெறுவர். இந்நோயால் அவதிப்படுபவர்களின் முதன்மையானவர் கமல்!!!!சரி; விசயத்துக்கு வருவோம்; என் இனிய ஈழத்தமிழ் உள்ளங்களே,தெனாலி படத்தில் ஈழத்தமிழை கொச்சைப்படுத்தி பணம் சம்பாதித்தார்.வாழ்க என்று வாழ்த்தினோம்!மன்மதன் அம்பு படத்தில் ஈழத்தமிழனை நடிகையின் செருப்பாக இருக்க கெஞ்சுபவனாகவும் ஈழத்தமிழச்சியை பைத்தியக்காரியைவிட கேவலமானவளாகவும்...