Tuesday, April 14, 2015

யுத்தத்தின் வடுக்கள்......!

எல்லோரும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியாயிற்று. நான்மட்டும் இன்னும் சொல்லவில்லையே......அதுதான் புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் உலகம் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கும் தமிழ்க்குடியிடம்  மட்டக்களப்பில் என் அனுபவம் சிலவற்றை பகிர்ந்துகொண்டு புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.ஒருசமயம் ஒரு 60 வயது நோயாளி என்னிடம் வந்தார். அவரது நோயை அறியும் நாட்டத்தில் நான் அவரைக்  கேள்விகள் கேட்டவண்ணம்  இருந்தேன். அப்போது...

Friday, January 9, 2015

மைத்திரி தமிழுக்கு மதுரமா?

இலங்கை சனாதிபதித் தேர்தல் முடிந்தாயிற்று! மக்களின் பார்வைக்கு மைத்திரிபால சிறிசேனா வென்றாயிற்று! வன்னியில்ச் செய்த அட்டூழியங்களுக்கு தண்டனை கொடுத்தாயிற்று என்ற சந்தோசத்தில் முகநூலில் நம்தமிழர் நாட்டின் தேசியகீதத்தில் பற்றுவந்துவிட்டதென்றும் இலங்கையன் என்று பெருமைவந்துவிட்டதென்றும் புளகாங்கிதம் அடையத் தொடங்கியாயிற்று!  இலங்கைக்கு இனி நல்ல காலம்தான்!!! ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்ல காலத்தை விரும்பிய நம்மவர்களுக்கு பிறக்க இருக்கின்ற "நல்ல "...

Friday, January 11, 2013

ரிசானா - சவூதிச் சட்டத்தை கேள்விகேட்க வந்தவள்! டெல்லி தந்த மோகத்தை தீர்க்கவந்தவள்!

டெல்லிக் கொடூரத்தின்பின் மரணதண்டனையின் அவசியம் உணரப்படலாயிற்று என்பது உண்மைதான். ஆனால் அது சவூதியின் ஷரியச்சட்டத்தின்படியான மரணதண்டனை அல்ல! இந்த யதார்த்தத்தை பலர் புரிந்திலர். ஆனால் இலங்கை மக்கள் ரிசானா என்னும் புனிதவதியூடாக நன்கு புரிந்துகொண்டுள்ளனர். ‘சிறப்பான சிகிச்சை வேண்டும்’’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். பலன் இல்லை.சிறப்பான தீர்ப்பு வேண்டும்’ என்று பாதிக்க வைத்த கொடியவர்களை சவூதிக்கு அனுப்புங்கள்; பலன் இருக்கும்’’...

Thursday, November 22, 2012

தமிழ்க்குழந்தையின் தந்தை தமிழனில்லையோ?

ஒரு ஐந்துவயது குழந்தையையும் அக்குழந்தையின் தாயையும் சந்தித்தேன்.குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டேன். "யஸ்வந்" என்று பெருமையோடு கூறினார் அத்தாயார்!அப்பன் தமிழனில்லையோ என்றுநினைத்துக்கொண்டேன்! ஒருகாலத்தில் நல்லதம்பி,வெற்றிவேல்,முருகன் என்றுபெயர்வைத்து பெருமைகொண்ட தமிழ்ச்சாதி,இன்று யஸ்வந் என்று பெயர்வைக்கும் இழிநிலை!அவ்வளவுதான்! ஒருசில பெற்றோர் அப்பாவின் முதல் எழுத்தும் அம்மாவின் கடைசியெழுத்தும் என்று பொழிப்புரை வழங்குவர்! அப்பாவின் பெயர் "ச"...

Monday, November 12, 2012

தீபாவளியும் கருப்புச்சட்டை அரசியலும் பெண்ணியமும் சின்னத்திரையும்!

கருப்புக் கண்ணன் ஆரியனாக இருக்க வாய்ப்பேயில்லை....சிவபெருமானின் இடப்பாகத்தை உமையம்மை பெற்ற திருநாளே தீபாவளித்திருநாள்!!! இவ்வண்ணமே பண்டுதொட்டு தமிழர் கொண்டாடினர்! நாடகத்திற்காய் தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மூழ்கியிருந்தால் எப்படி பெண்களுக்கு சமவுரிமையும் சுதந்திரமும் கிடைக்கும்? கட்டுரையை முழுமையாகப் படிப்பதற்கு:-http://sivathamiloan.blogspot.com/2012/11/blog-post.ht...

Wednesday, January 18, 2012

சங்கத்தமிழை இழிவுபடுத்தும் சங்கர்!!!!!

நண்பன் சங்கரின் ஆளுமைக்குரிய படமா இல்லையா என்ற பட்டிமன்றம் இதுவல்ல!!!! அதில் எனக்கு ஈடுபாடும் இல்லை!!!! ஆனால் ஆளுமைமிக்க சங்கர்......அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திரையுலகைப் பயன்படுத்தும்போது ஏன் தான் கவனக்குறைவாக இருக்கின்றார் என்னும்போது வருத்தமாகத்தான் இருக்கின்றது. கவனக்குறைவா? சமூக அக்கறையீனமா? ஒருமுறைவிட்டால் தவறு....தொடர்ந்து செய்தால்?சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்று இலக்கியபெயர்களை நகச்சுவைக்கு பயன்படுத்தினார்!!! தமிழ் பொறுமை காத்தது!குறித்த...

Sunday, December 11, 2011

தமிழ் திரைப்பட நடிகர்களும் நம் சனங்களும்!!!!

இந்தக் காணொளியை தற்செயலாக அவதானிக்க வேண்டி வந்தது. காணொளியை பார்த்ததும் ஆச்சரியப்படவில்லை! நம்மவரின் முட்டாள்த்தனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக திரைப்பட நடிகர்களை பாராட்டத் தோன்றியது! நீங்களும் ஒருதடவை பார்த்துவிட்டு மீதிப்பகுதியைப் படிக்க.திரைப்படக்காரர்களுக்கு பிழைப்புத்தான் முக்கியம் என்பதை நம் சனங்கள் புரிந்து கொள்ளும் காலம் எப்போதோ? கப்டன் என்பார்.....எந்த இராணுவத்துக்கு என்றால் முழிப்பார்! இளைய தளபதி என்பர்.....எந்தப் படைக்கு என்றால் திணறுவர்! தல என்பர்........என்னத்தை சாதித்த தலைவர் என்றால் மௌனிப்பர்!பிழைப்புக்காக இங்கொன்று அங்கொன்று...

Monday, November 28, 2011

தனுசின் கொலைவெறியில் சிக்கிய தமிழ்

தனுசின் கொலைவெறி பாடல் தமிழ்திரையில் தமிழின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் அமைந்திருப்பதை தமிழ் ஆர்வலர் பலர் கண்டித்திருந்தனர். இதற்கு தனுசின் பதிலைப் பாருங்களேன்!"நான் பொழுதுபோக்குத் துறையில் தொழில்புரிபவன். மக்கள் நேசிக்கும், மக்களைச் சென்றடையும் விதத்தில் பொழுதுபோக்கான அம்சங்களைக் கொடுக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். மொழியை வளர்ப்பதற்கு ஏராளமானோர் இருக்கிறார்கள். நான் அந்தத்துறையில் ஈடுபடவில்லை. மக்களின் ரசனைக்கு ஏற்ப காலத்துக்குத் தகுந்த வகையில் பாடலைக் கொடுத்திருக்கிறேன். தமிழாக இருக்கலாம், தெலுங்கு, ஹிந்தியாக இருந்தாலும் மக்கள்...

Sunday, September 11, 2011

"கலைஞர்" என்று சொல்லும் நா நாவோ?

யூடியூப் காணொளிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அருமையான காணொளி என் கண்ணுள் வந்து என்னை பல கேள்வி கேட்டது!!! என் நெஞ்சறையில் நிசப்பதம்! நிசப்பதத்தின் முடிவில் கருணையில்லா நிதியை பெற்ற தாயை திட்டித்தீர்க்கும் கோபம் பெருக்கெடுத்தது! தமிழர் செய்த பாவத்தின் சம்பளம் கருணையில்லா நிதி என்று விதி எழுதியிருக்கையில் அந்தத் தாயை கோபித்து என்ன பயன்? அது என்ன காணொளி? ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெருமகன் திரு.அப்துல்கலாம் ஆற்றிய உரை!!!!!! தமிழுக்கு அங்கு அவர் பெருமை சேர்த்த அழகை எந்தத்தமிழரும் விழா எடுத்து கொண்டாடவில்லையே என்றபோது பெருந்துன்பம்...

Monday, July 18, 2011

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய பூசைமொழி சமஸ்கிருதம் தமிழருடைய இசைமொழி கர்நாடகமும் தெலுங்கும் சமஸ்கிருதமும் தமிழருடைய நாகரீகமொழி ஆங்கிலம் தமிழருக்கு தமிழ் எதற்கு? தமிழருடைய திருமண நிகழ்வில்கூட தமிழ் இல்லை! ஏன் நாகரீகத்தமிழரின் மாப்பிள்ளையின் ஆடையில்க்கூட தமிழ்சால்பு இல்லை! தமிழருடைய மரண நிகழ்வு பூசையில்கூட சமஸ்கிருதம்! உலகிலேயே தன்னுடைய மொழியைவிட இன்னொருமொழியை புனிதம்....மந்திரசக்தி என்று கதையளக்கின்ற இனம் இருக்குமென்றால் அது தமிழினம் தான்! உலகிலேயே தன்னுடைய...

Friday, May 27, 2011

சுவாமி தூக்குவதிலும் சாதியா? கடவுளே!

தமிழகத்தில் சென்னையிலுள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, சுவாமி வீதிவலம் வந்து கொண்டிருந்தார். சுவாமியை பிராமணர் மட்டுமே மாறிமாறி தூக்கினர். மெதுவாக அங்கிருந்த ஒருவரை சாதரண பக்தர்கள் தூக்கக்கூடாதா என்று கேட்டேன். பிராமணர் சுத்தமானவ்ர்....எனவே தீட்டுப்படாது! ஆனால் ஏனையவர் எப்படி என்று தெரியாதே என்றார். காஞ்சியில் கருவறையில் செய்யாத அசுத்தத்தையா சாதரண பக்தர் செய்துவிடுவர் என்று கேட்க என்னுடைய நாக்கு துடித்தது.ஆனால் அடக்கி அமைதியாகி...

Tuesday, March 22, 2011

முறைதவறிய கர்ப்பங்கள் யாழில் சொல்லும் நீதி என்ன?

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் இன்றும் ஒருசில நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தின் வடு ஆண்-பெண் சனத்தொகை விகிதாசாரத்தில் காணப்படுகின்றது. ஏனெனில் இப்போர்க்காலத்தில் இப்பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டன! இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையிலும் குறைவாகவே இன்னுமுள்ளது. எனவே; ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதும்; விரும்பிய நேரத்தில் விவகாரத்துச் செய்து கொள்வதும்; திருமணம் செய்துகொள்ளாமலே...

Thursday, March 17, 2011

தமிழ்த் தியாகி விநாயகர்!

அனுராதபுரத்தில் 14ம் திகதி பிள்ளையார் கோயிலிலுள்ள பிள்ளையார் சிலையை டயர் போட்டு எரித்த கேவலமான செய்தியை அறிந்ததும் மனவருத்தம் ஏற்பட்டது!திராவிடர் கழகத்தவருக்கு விரோதியாக இருந்த பிள்ளையார் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் விரோதியாகிவிட்டார்! பிள்ளையாரை எதிர்த்து திராவிடம் பேசி; தென்னாட்டு சிந்தாந்தத்தையும் புறக்கணித்து;தமிழர் உரிமைகளையும் துறந்து திமுகவுக்கு சாமரை வீசுவதிலேயே திகவின் காலம் கழிகின்றது!தமிழ்நாட்டில் திகவினர் அன்று பிள்ளையார் சிலைகளை உடைத்து...