இந்தக் காணொளியை தற்செயலாக அவதானிக்க வேண்டி வந்தது. காணொளியை பார்த்ததும் ஆச்சரியப்படவில்லை! நம்மவரின் முட்டாள்த்தனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக திரைப்பட நடிகர்களை பாராட்டத் தோன்றியது! நீங்களும் ஒருதடவை பார்த்துவிட்டு மீதிப்பகுதியைப் படிக்க.திரைப்படக்காரர்களுக்கு பிழைப்புத்தான் முக்கியம் என்பதை நம் சனங்கள் புரிந்து கொள்ளும் காலம் எப்போதோ? கப்டன் என்பார்.....எந்த இராணுவத்துக்கு என்றால் முழிப்பார்! இளைய தளபதி என்பர்.....எந்தப் படைக்கு என்றால் திணறுவர்! தல என்பர்........என்னத்தை சாதித்த தலைவர் என்றால் மௌனிப்பர்!பிழைப்புக்காக இங்கொன்று அங்கொன்று...