Monday, November 28, 2011

தனுசின் கொலைவெறியில் சிக்கிய தமிழ்

தனுசின் கொலைவெறி பாடல் தமிழ்திரையில் தமிழின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் அமைந்திருப்பதை தமிழ் ஆர்வலர் பலர் கண்டித்திருந்தனர். இதற்கு தனுசின் பதிலைப் பாருங்களேன்!"நான் பொழுதுபோக்குத் துறையில் தொழில்புரிபவன். மக்கள் நேசிக்கும், மக்களைச் சென்றடையும் விதத்தில் பொழுதுபோக்கான அம்சங்களைக் கொடுக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். மொழியை வளர்ப்பதற்கு ஏராளமானோர் இருக்கிறார்கள். நான் அந்தத்துறையில் ஈடுபடவில்லை. மக்களின் ரசனைக்கு ஏற்ப காலத்துக்குத் தகுந்த வகையில் பாடலைக் கொடுத்திருக்கிறேன். தமிழாக இருக்கலாம், தெலுங்கு, ஹிந்தியாக இருந்தாலும் மக்கள்...