Sunday, September 11, 2011

"கலைஞர்" என்று சொல்லும் நா நாவோ?

யூடியூப் காணொளிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அருமையான காணொளி என் கண்ணுள் வந்து என்னை பல கேள்வி கேட்டது!!! என் நெஞ்சறையில் நிசப்பதம்! நிசப்பதத்தின் முடிவில் கருணையில்லா நிதியை பெற்ற தாயை திட்டித்தீர்க்கும் கோபம் பெருக்கெடுத்தது! தமிழர் செய்த பாவத்தின் சம்பளம் கருணையில்லா நிதி என்று விதி எழுதியிருக்கையில் அந்தத் தாயை கோபித்து என்ன பயன்? அது என்ன காணொளி? ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெருமகன் திரு.அப்துல்கலாம் ஆற்றிய உரை!!!!!! தமிழுக்கு அங்கு அவர் பெருமை சேர்த்த அழகை எந்தத்தமிழரும் விழா எடுத்து கொண்டாடவில்லையே என்றபோது பெருந்துன்பம்...