Friday, January 14, 2011

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையில் உலக சைவ பேரவையின் இலங்கைக்கிளை வழங்கிய நிதி

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசித்த இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால்மா ஓடிக்குளோன் பேபிசெற் பம்பஸ் உட்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆரையம்பதி சுமுஆ பாடசாலை ஆரையம்பதி மகா வித்தியாலயம் தாளங்குடா விநாயகர் வித்தியாலயம் தாளங்குடா றோ.க.வித்தியாலயம் கிரான்குளம் விநாயகர் வித்தியாலயம் துறைநீலாவணை மகா வித்தியாலயம் துறைநீலாவணை பொதுக் கட்டடம் போன்றவற்றில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.அத்தோடு தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மதிய உணவுக்கும் நிதி வழங்கப்பட்டது....

குளிரும் வெள்ளமும் மரணப்பொறியாகி வாடிநிற்கும் எம்முறவுகளுக்கு உதவிடுக!!!!

குளிரினால் மரணமடையும் எம்முறவுகள்!!வழமைக்கு மாறாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மற்றும் வாகரைப் பகுதிகளைச் சோ்ந்த ஐந்து போ் குளிரில் விறைத்து நேற்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளனர்.அதிக குளிரினால் உடல் வெப்பநிலை குறைவடைந்ததால் அவர்கள் இறந்திருப்பதாக வாகரை உதவி அரசாங்க அதிபர் ஆர். இராஜகுலநாயகி தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு நகர வீதியில் பிச்சை எடுப்பவராவார்.நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வெப்பநிலை சுமார் 16 பாகையளவிற்கு குறைவடைந்திருந்தது.மட்டக்களப்பு...

Thursday, January 13, 2011

பொங்கல் பண்டிகையில் கொண்டாட்டம் வேண்டாம்! நீரில் மூழ்கித் தவிக்கும் தமிழருக்கு உதவுக!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்!இங்கு வலி பிறந்துள்ளதே!!!கடற்கன்னிகளின் தமிழால்நெஞ்சைக் கொள்ளைகொள்ளும்கிழக்கு ஈழவளநாடுவெள்ளத்துள் மிதக்க-பொங்குவதுஅழகா?அகதிகளாய் அங்குமாந்தர் அலைய -இன்னிசையில்நாம் மெய்மறப்பின்எங்கள் உடலில்ஓடுவது தமிழ்க்குருதியோ?அலைபேசி தொலைபேசிகைபேசி என்றுஉலகம் சுருங்கிவிட்டஇக்காலத்தில் மீனவன்செத்தால் தந்தி -ஆயினும்மந்திரிபதவி பற்றியதென்றால்விமானத்தில் டெல்லி!இப்படியிருக்கும் கொலைஞருக்குஎப்படித் தெரியும்கிழக்கு ஈழவளநாட்டில்வெள்ளத்துள்...

Wednesday, January 5, 2011

கமலின் அந்தரங்க நோயால் அல்லல்படும் ஈழத்தமிழ்

அடுத்தவர் உள்ளத்தை காயப்படுத்தி இன்பம் தேடுவது.......ஆகா; ஆனந்தம் - இதுஒரு நோய்!!!இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் ஆனந்தம் பெறுவர். இந்நோயால் அவதிப்படுபவர்களின் முதன்மையானவர் கமல்!!!!சரி; விசயத்துக்கு வருவோம்; என் இனிய ஈழத்தமிழ் உள்ளங்களே,தெனாலி படத்தில் ஈழத்தமிழை கொச்சைப்படுத்தி பணம் சம்பாதித்தார்.வாழ்க என்று வாழ்த்தினோம்!மன்மதன் அம்பு படத்தில் ஈழத்தமிழனை நடிகையின் செருப்பாக இருக்க கெஞ்சுபவனாகவும் ஈழத்தமிழச்சியை பைத்தியக்காரியைவிட கேவலமானவளாகவும்...