Tuesday, August 17, 2010

அறிஞர் அண்ணா கொல்லப்பட்டாரா?

பயப்படாதீர்கள்.....அறிஞர் அண்ணா இயற்கை எய்தியது இயற்கையாகத்தான். ஆனால் அவரது கொள்கைகள் உயிரோடுள்ளவரை அவரும் உயிரோடு இருப்பார் என்பது பொதுசனங்களின் நம்பிக்கை. ஆனால் பொதுசனங்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார்கள் அண்ணாவின் வாரிசுகளே! அது அண்ணாவைக் கொன்றதுபோல்தானே?ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதுபோல் அண்ணாவின் கொள்கைகளை கொன்றமைக்கு ஒரு எளிய உதாரணத்தை இங்கு பார்ப்போம்!அறிஞர் அண்ணா, ஒருமுறை பழைய மன்னர்கட்டிய கோயிலை பார்க்க வேண்டியிருந்தது....

Wednesday, August 4, 2010

யாழ்.போதனா வைத்தியசாலையும் தலைகுனியவேண்டிய தர்மவான்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயிற்சியின் நிமித்தம் பத்துநாட்கள் போயிற்று வந்தேன். மருத்துவ மாணவனாக என் வாழ்நாளில் மகிழ்வோடு பணியாற்றி அனுபவக் கல்வியை அதிகளவு நுகரும் பேறுபெற்ற நாட்கள் என்று இந்தப் பத்துநாட்களையும் சொல்லலாம். சத்திரசிகிச்சைப் பிரிவில் பயிற்சிக்கு நின்றமையால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவை ஆதாரமாகக்கொண்டு இங்கு என் கட்டுரை வைத்தியசாலையை ஆய்ந்து செல்கின்றது. மருத்துவர் திரு.ரவிராஜ் ஐயாவின் சத்திரசிகிச்சை நோயாளர்...