கலைஞரும் தமிழுணர்வும் மானாட மயிலாடவும்...
மேல் உள்ள வலைப்பூ பதிவை ஒருகணம் படியுங்கள் என் இனிய உறவுகளே!
கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி இவையெல்லாம் எமக்குத் தேவைதான சொல்லுங்கள்? புலம்பெயர்ந்த உங்கள் நிதியில் பெருத்த இந்த நிறுவனங்கள் தமிழை சீர்குலைப்பதை அறியீரோ? உங்கள் பணத்தில் பெருத்து உங்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதித்த இந்நிறுவன தொலைக்காட்சிகளை கண்டுகளிப்பது மடமையல்லவா?
மடமையில் மூழ்கியிருப்பது எம்குலப் பெருமையாகுமா?
புலம்பெயர் தேசத்தில் உள்ள தோழர்களுடன் உரையாடியபோது சீர்குலையும் எம் இளையோரின் பண்பாட்டை எடுத்துரைத்தனர்.மனம் வெந்தது....
Sunday, January 24, 2010
Wednesday, January 13, 2010
குறள்கொண்டு விதி எழுது

தை பிறந்தால்
வழி பிறக்கும்;
தைதோறும் நம்பிக்கைக்கு
குறைவில்லை இவ்வண்ணம்!
ஆனால்;
இனிய தமிழே,
நம்பிக்கையை தளரவிடாதே!
ஊக்கம் முடியெனின்
வெற்றி குடியாகும்!
இனிய தமிழே,
வெற்றி குடியாகும்!
ஆக்கம் அதர்வினாய்ச்
செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
என்னும் வள்ளுவன்
குறளை மனதில்
பேணு!
இனிய தமிழே,
ஆக்கத்தை இழந்தது
ஒரு விசயமே
இல்லை ஊக்கம்
உள்ளவரை!
ஆக்கம் இழந்தேமென்று
அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
என்னும் வள்ளுவன்
மறையை மறந்திடாதே!
இனிய தமிழே,
நன்மையே...