Saturday, December 25, 2010

மட்டுமாநகர் தந்த ஈழத்துப் பூராடனார்

கடற்கன்னிகள் தமிழ்பாடும் மட்டுமாநகர் தந்த இலக்கியமணி ஈழத்துப் பூராடனார்கனடாவில் 20ம் திகதி காலமானார்.1965ஆம் ஆண்டு யாரிந்த வேடர் என்ற தலைப்பில் எழுதிய நூலுக்காக பேரினவாதத்தால் நீதிமன்றத்தில் நிற்கவேண்டிய இக்கட்டான சூழலை பெற்றபோதும் தளர்வுறாது தமிழ்ப்பணியில் ஈடுபட்ட பெருமைக்குரியவர்.குற்றம் ஆனால் குற்றமில்லை என்ற தலைப்பில் தமிழ்முரசு இணையவலைப்பூவில் தமிழறிஞர் அ.முத்துலிங்கம் இந்நிகழ்வை பதிவுசெய்துள்ளார்."அவர் அப்படி என்ன புத்தகத்தில் எழுதியிருந்தார்....

Tuesday, December 21, 2010

தமிழ்ப்பார் இழந்துவிட்ட தமிழ்மறைக் காவலர்

தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் தனது 96 அகவையில் நேற்று (20ம் திகதி) கொழும்பில் காலமானார். 1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.1965இல் தமிழரசுக் கட்சியில் கிளிநொச்சியில் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.திருக்குறளை தமிழ்மறை என்று தமிழ்முழக்கம் செய்து; தமிழ்மறைக்...

Saturday, September 4, 2010

சென்னை மாநகரின் வானும்(படமும்)ஒரு பாடமும்

சென்னை மாநகரின் வானை வானிலிருந்து பார்த்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று எண்ணினேன். விமானநிலையத்தில் இருக்கையை உறுதிப்படுத்துபவரிடம் சாளரம் அருகே இருக்கை வேண்டுமெனக் கேட்டேன். சாளரத்துக்கு அருகாமையில் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டமையினால் எனது அலைபேசியின் உதவியுடன் சென்னை மாநகரின் வானைப் படம் பிடித்துக் கொண்டேன். பயணிகளின் அலைபேசிகள் சமிஞ்ஞை பயன்பாட்டில் இருந்தால் விமானிகள் கட்டுப்பாட்டு அறையுடன் பேணுகின்ற தொலைத்தொடர்ப்பு அலைவரிசைகளில் இடைஞ்சல்களை...

Tuesday, August 17, 2010

அறிஞர் அண்ணா கொல்லப்பட்டாரா?

பயப்படாதீர்கள்.....அறிஞர் அண்ணா இயற்கை எய்தியது இயற்கையாகத்தான். ஆனால் அவரது கொள்கைகள் உயிரோடுள்ளவரை அவரும் உயிரோடு இருப்பார் என்பது பொதுசனங்களின் நம்பிக்கை. ஆனால் பொதுசனங்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார்கள் அண்ணாவின் வாரிசுகளே! அது அண்ணாவைக் கொன்றதுபோல்தானே?ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதுபோல் அண்ணாவின் கொள்கைகளை கொன்றமைக்கு ஒரு எளிய உதாரணத்தை இங்கு பார்ப்போம்!அறிஞர் அண்ணா, ஒருமுறை பழைய மன்னர்கட்டிய கோயிலை பார்க்க வேண்டியிருந்தது....

Wednesday, August 4, 2010

யாழ்.போதனா வைத்தியசாலையும் தலைகுனியவேண்டிய தர்மவான்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயிற்சியின் நிமித்தம் பத்துநாட்கள் போயிற்று வந்தேன். மருத்துவ மாணவனாக என் வாழ்நாளில் மகிழ்வோடு பணியாற்றி அனுபவக் கல்வியை அதிகளவு நுகரும் பேறுபெற்ற நாட்கள் என்று இந்தப் பத்துநாட்களையும் சொல்லலாம். சத்திரசிகிச்சைப் பிரிவில் பயிற்சிக்கு நின்றமையால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவை ஆதாரமாகக்கொண்டு இங்கு என் கட்டுரை வைத்தியசாலையை ஆய்ந்து செல்கின்றது. மருத்துவர் திரு.ரவிராஜ் ஐயாவின் சத்திரசிகிச்சை நோயாளர்...

Thursday, June 24, 2010

செம்மொழி மாநாடும் கலைஞரின் தமிழ்ப்பணியும்

கல்விச் சுமையால் வலையில் அதிக கவனம் செலுத்தமுடியவில்லை. இதுவே ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்றென்று பதிவு எழுதிய வண்ணம் இருக்கக் காரணம்! இது இப்படியிருக்க; "செம்மொழி மாநாடு நடக்கும் போது ஒருபதிவேனும் பதியாட்டி தமிழன் என்று பெருமை சொல்லமுடியுமா? " என்று கடுந்தொனியில் கலைஞர் கனவில் வந்து கேட்டுத் தொலைத்துவிட்டார். அதுதான் ஒருபதிவு! எனக்கும் கலைஞருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கலைஞரை எனக்கு நல்லாத் தெரியும்.{அவர் குணத்தை நல்லாத் தெரியும் என்கிறேன்.........வேறுமாதிரி...

Wednesday, May 12, 2010

பெரியாரை அசிங்கப்படுத்திய விடுதலை பத்திரிக்கை

பெரியார் கடவுள் இல்லை என்று நாத்தீகம் பேசியதில் எந்தவிதமான உடன்பாடும் எனக்கில்லை. சாதி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கிய பெரியாரின் மேல் மரியாதை என்றும் உண்டு. பெரியார் சொன்னதெல்லாம் சரியானது என்ற கருத்து இருக்குமென்றால் "எங்களை அறியாமலே பெரியாரைக் கடவுளாய் ஏற்று பெரியார் மதம்" என்று மதநம்பிக்கைக்கு உரியவராகிவிடுகிறோம் !பெரியாரும் மனிதரே என்று கருதி, அவரிடம் பிழையான கருத்துகள் இருந்தன என்பதை பெருந்தன்மையுடன் ஏற்று, அவர் காட்டியவற்றில் நல்லவற்றை எடுத்து நல்லவழியில் நடப்பர் மேன்மக்கள்!சரி விசயத்துக்கு வருவோம்;பெரியாரின் புகழ்பரப்பும் பெரியாரின் கட்சியால்...

Monday, April 26, 2010

பார்வதி அம்மையாரை அவமானப்படுத்திய வீரமணியரும் தமிழ் ஓவியாவும்

பார்வதி தாய் கருணையில்லா நிதியின் உதவியைப் பெற்று தமிழகம் வரவேண்டுமா? தமிழ் ஒவியாவின் கேவலம்! தமிழ் ஒவியா அவர்களே,"தாயார் பார்வதி அம்மையாரை கலைஞர் உதவியுடன் வாழ வைப்போம்" என்பது உங்கள் (வீரமணியரின்)கருத்தென அறிந்து தமிழரின் நிலையென்னி சிரிப்பாய் சிரிக்க வேண்டியதாயிற்று!அவர் வைகோ, நெடுமாறனின் உதவியுடன் வாழக்கூடாது என்றா கலைஞர் திருப்பி அனுப்பிவைத்தார்? யாருக்கும் சொல்லாதது வேறுவிடயம்! தமிழக காவல்த்துறைக்கு தெரிந்தது, காவற்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வருக்கும் தெரியாது என்றால் யாரின் காதில் யார் பூச்சுற்றுவது?கலைஞருக்கு வைகோ, நெடுமாறன் நல்ல பெயர்...

Tuesday, April 6, 2010

வாக்குச்சீட்டு என்னும் அத்திவாரத்தால் வலுவான வீட்டை எழுப்புகவே!

உய்யும் வழி ஏதுமின்றிதாயகத்தில் நாம்வாடினும்- ஒருவீடேனும் ஆறுதலுக்குவேண்டுமல்லவா?வீட்டின் இருப்புஎமக்கு உறுதியைதருமல்லவா?வாழிய எங்கள்வீடு!வளர்க்க எங்கள்வீடு!தடம் புரளாதுதரணியில் தமிழுக்காய்வீடு நடைபோடவேண்டும்!தமிழின் சால்பைஎன்றுமே பேணவேண்டும்!வாக்கெனும் அத்திவாரத்தால்வலுவான வீட்டைஎழுப்புகவே!தமிழே,எழுப்புக...

நித்தியானந்தரும் பாதிரிகளும் ஐரோப்பா-தமிழக ஊடகங்களும்!!!

வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தமிழை சிதைக்கவே (தமிங்கிலத்தை வளர்த்து) உருவாகி உழைக்கின்ற சண் போன்ற தமிழக தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை சிவகாசிக்காரன் என்னும் வலைப்பதிவு எழுத்தாளர், பாதிரிகள்-நித்தியானந்தர் விடயத்தை வைத்து அருமையாக ஒப்பிட்டுள்ளார் .நித்தியானந்தர் விடயத்தில் அவருடைய முன்னைய பதிவொன்றில் சமூகத்தை அருமையான கேள்விகள் கொண்டும் ஆராய்ந்துள்ளார். வலையுலகில் அதிகம் பயணிப்பதில்லை. போதியநேரம் இருப்பதில்லை. பயணிக்கும் சந்தர்ப்பத்தில் இவரது இவ்விரு பதிவுகளையும் வாசித்தபோது, இவரது இப்பதிவுகளை யாவருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது....

Tuesday, March 30, 2010

தமிழகமே, அகதியை வல்லுறவு செய்தது நியாயமா?

ஈழநாட்டில் வாழமுடியாது அகதியாக தாய்வீடு வந்த திருமணமான பெண்ணை காவற்துறையினர் கற்பழித்த கொடூரம்.......கேவலம்........தமிழக மாண்புக்கே நேர்ந்த அவமானம் பற்றி தமிழகம் அமைதியாய் இருப்பது அழகாகுமா?தன்வீட்டில் வாழமுடியாது தாய்வீட்டுக்கு வந்த திருமணமான ஏதிலிப் பெண்ணை வல்லுறவு செய்ய எங்கனம் மனம் வந்தது?நெஞ்சை வாட்டி உருக்கி உருக்குலைய வைத்த செய்தியை இங்கு கீழே பதிவு செய்கிறேன்."தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள...

Friday, February 12, 2010

வன்னியில் சிதைந்த தமிழ்ப் பிள்ளையின் வாழ்க்கையில் ஒளியேற்ற ஒரு வாய்ப்பு-உதவ முன்வாருங்கள்!!!!

கீழே உள்ள தொடுப்பை அழுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் கரங்களால் வன்னியில் சிதைந்துபோன ஒரு தமிழ் பிள்ளையின் வாழ்வில் ஒளியேற்ற ஒரு வாய்ப்பு:-17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை: அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியு...

Sunday, January 24, 2010

புலம்பெயர்ந்த உறவுகளே, ஒருகணம் சிந்தியுங்கள்...........இவை உங்களுக்குத் தேவைதானா சொல்லுங்கள்?

கலைஞரும் தமிழுணர்வும் மானாட மயிலாடவும்... மேல் உள்ள வலைப்பூ பதிவை ஒருகணம் படியுங்கள் என் இனிய உறவுகளே! கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி இவையெல்லாம் எமக்குத் தேவைதான சொல்லுங்கள்? புலம்பெயர்ந்த உங்கள் நிதியில் பெருத்த இந்த நிறுவனங்கள் தமிழை சீர்குலைப்பதை அறியீரோ? உங்கள் பணத்தில் பெருத்து உங்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதித்த இந்நிறுவன தொலைக்காட்சிகளை கண்டுகளிப்பது மடமையல்லவா? மடமையில் மூழ்கியிருப்பது எம்குலப் பெருமையாகுமா? புலம்பெயர் தேசத்தில் உள்ள தோழர்களுடன் உரையாடியபோது சீர்குலையும் எம் இளையோரின் பண்பாட்டை எடுத்துரைத்தனர்.மனம் வெந்தது....

Wednesday, January 13, 2010

குறள்கொண்டு விதி எழுது

தை பிறந்தால் வழி பிறக்கும்; தைதோறும் நம்பிக்கைக்கு குறைவில்லை இவ்வண்ணம்! ஆனால்; இனிய தமிழே, நம்பிக்கையை தளரவிடாதே! ஊக்கம் முடியெனின் வெற்றி குடியாகும்! இனிய தமிழே, வெற்றி குடியாகும்! ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை என்னும் வள்ளுவன் குறளை மனதில் பேணு! இனிய தமிழே, ஆக்கத்தை இழந்தது ஒரு விசயமே இல்லை ஊக்கம் உள்ளவரை! ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தங் கைத்துடை யார் என்னும் வள்ளுவன் மறையை மறந்திடாதே! இனிய தமிழே, நன்மையே...