வார இதழ்களில் வெளியான திரைவிமர்சனங்களில் "நீளும் கடிதங்கள் தூக்க மாத்திரைகள்" என பொருள்பட ஒருசிலவற்றிலும் தரமான இயக்குனர் சேரன் என சேரனின் புகழை ஏனைய சிலவற்றிலுமாக பொக்கிசம் தீட்டப்பட்டிருக்க; திரையில் பார்க்க இரவு நேரக் காட்சிக்கு சென்றிருந்தேன். கந்தசாமி பார்க்கும் ஆவலைவிட பொக்கிசம் பார்க்கும் ஆவலே மேலிட்டிருந்தது. காரணம் சேரனின் திறமைகள்!
உண்மையிலேயே ஒரு இலக்கியம்-பொக்கிசம். படம் முடிந்தபோது திரையரங்கை சுற்றிப் பார்த்தேன்.படம் பார்க்க வந்திருந்த கூட்டம் ஐம்பதைத் தாண்டாது. நித்திரையில்...
Monday, August 24, 2009
Wednesday, August 19, 2009
அருள்மழை பொழியும் நல்லூரான் தேர்

முருகன் என்றால் அழகன் ஆகும். அழகன் என்பதற்கு பொருள் நல்லூர் முருகன்.யாழை மட்டுமல்ல ஈழ வளநாட்டை அருள்மழையால் ஈர்த்து நல்லருள் பாலிக்கின்ற முருகப்பெருமானின் தேர்த்திருவிழா இன்று இனிதே நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ அரோகரா ஒலிகள் விண்ணை முட்ட தந்தைக்கே பிரணவப் பொருளை போதித்த முருகப் பெருமான் தேரேறி நல்லூர் ஆலய வீதியில் வலம்வந்த காட்சியை நேரில் காணும் பேறு கிட்டாதவர்களுக்காய் (என்னையும் சேர்த்து)நிழற்படங்களை பதிவேற்றுகிறேன். இப்படங்கள் இணையங்களில் இருந்து...
Friday, August 14, 2009
தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும்
எங்கள் இன்பத்தை சிதைத்த இந்தியத் தாயே, உனது இன்பநாள் இன்று! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும் ஆனால் நீ...
வள்ளுவன் சிலைகேட்டானா? மானம் கேட்டானா?
சுமுக நிலைவந்ததென்ற பாவியேவள்ளுவன் சிலைகேட்டானா?மானம் கேட்டானா?
பண்டப் பரிமாற்றமாய்சிலைதிறப்பு மானங்கெட்டவனே ஒக்கேனக்கல்எந்தப் பரிமாற்றமாகும்?வாடும் காவேரிவருத்தவில்லையா?
குளிரூட்டிய தனமிகு"தான" வீட்டில்சக்கரவண்டியில் சொகுசுமெத்தையில் நேரத்துக்குசாப்பாடென வாழும்உனக்குஎங்கள் நாட்டில்சுமுகநிலை எங்கனம்வந்ததறிந்தாய்?
கோமாளி கூட்டமென்றுகூத்தாடி சொன்னபோதுமானங்கெட்டு அமைதியாய்இருந்த இழியவன்நீ!
சீ உன்னைநம்பி அலையும்தமிழ் தலைகள்வெட்கமில்லா அடிமை சாசனங்க...
Thursday, August 13, 2009
அரங்கன் சன்னிதியில் தமிழுக்காய் கண்ணீர்மல்கி

அரங்கனின் ஆலயத்தில்இத்திங்கள் 12ம் நாள்
நான் கேட்ட
கேள்விகள் வரங்கள்
எக்காலம் ஆழ்வார்
நாவில் தவண்ட
தமிழுக்கு விடை
சொல்லும்?
"குட திசை முடியை வைத்துக்
குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித்
தென் திசை இலங்கை நோக்கி"
அரங்கன் நீர்
இருந்து என்ன
பயன்?
ஐயனே,
காத்தற் கடவுளே,
விபூடணிடம் நீர்
கொடுத்த வாக்கைத்
தொலைத்ததேன்?
மாண்டு போன
இனம் கதறியபோது
மந்திர ஒலியில்
மயங்கி இருந்தமை
நீதியா கண்ணா?
இலங்கையைக் காப்பேன்
என்றது தமிழுக்கு
கொடுத்த வாக்கில்லையா?
திருமாலே,அரங்கா,
நாராயணா,
எழுப்பிய...
காண்டம் புதிரும் புனிதமும் கொண்டதா?
காண்டம்! முழுக் காண்டமும் கேட்டேன்.சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவனானாலும் காண்டம் சொன்ன விதம், சொல்ல முன்னர் தொடுத்த கேள்விகள் நம்பிக்கையை பெரிதும் ஏற்படுத்தவில்லை.அவநம்பிக்கையையும் சேர்த்தே ஏற்படுத்திற்று. ஆனாலும்?
நம்பிக்கைக்கு அவ
நம்பிக்கை ஒன்றுக்கு
ஒன்றென்ற விகிதம்!
நம்பிக்கையா அவ
நம்பிக்கையா
மேலோங்கும் என்பது
காலம் உணர்த்தும்!
சென்ற பிறவி
கூடல் மாநகர்
மதுரை திருமண்ணில்
பிராமணன்!
செய்த பாவம்
பிராமண தொண்டை
மறந்தமை!
பெற்ற பேறு
ஈற்றில் பெற்ற
புத்தி!
ஆதலால் மறுபிறவி
மீண்டும் அரிய
மனிதப் பேறு!
தூய்மையற்ற பிராமணரே,
உருத்திராக்கத்துடன் தங்கம்
ஜொலிக்க...
Saturday, August 1, 2009
வீணை வாழ்க

வீணை ஆசிரியராகவும் கனடாவில் வீணாலய நிறுவுனராகவும் விளங்கி இசைப் பணியாற்றும் திருமதி.ஜெயந்தி இரத்தினகுமார் அவர்கட்கு ஒரு இசை இரசிகனாக இக்கவியை சமர்ப்பணம் செய்கிறேன். வீணாலயத்தின் இணைய முகவரிக்கு சென்று வீணாலயத்தின் பணிகளை அறிக :- வீணாலயம் (வீணாலயம் என்பதன்மேல் சொடுக்குக)கலைவாணி அருள்வாழும் வீணைவாழ்கதமிழ்நாதம் கனடாவில்என்றும் உயிர்வாழஇசைப் பணியாற்றும்வீணை வாழ்கசிவனருள் கூடிசிவநாதம் ஓதும்வீணை வாழ்கதங்கள் கைகளில் தவழும் தமிழ்மற இராவணன் சிவனார்க்குஅர்பணித்த...