Saturday, July 11, 2009

மாமல்லபுரம் என்னும் சிற்பக்கலைக் கருவூலம்

மாமல்லபுரம் ஓர் கலைக் சிற்பக் களஞ்சியம் என்று எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்வர். எனது எண்ணங்கள் மாமல்லபுரத்தை நோக்கி எப்போதும் ஓடிய வண்ணமேயிருந்தது.அப்படி என்ன அழகுக் களஞ்சியம் அங்குண்டு என்று ஆராய ஆவலுடன் இருந்தேன். தமிழகம் வந்ததும் என் நண்பன் காந்தனிடம் "போவோமா?" என்று கேட்ட முதல் சுற்றுலா மாமல்லபுரத்துக்குத்தான்.சிற்பங்களை இரசித்து சுவைக்கும் பழக்கமேதும் எனக்கு இருந்ததில்லை. கோயில்களுக்குச் சென்றால் கடவுளாகக் கண்டு வணங்குவதுடன் சரி. சிற்பங்களின்...

Friday, July 3, 2009

இந்தி தெரியாதுங்கோ

தமிழகப் பயணம் பெலரசில் இருந்து மதியம் 2.20 மணியளவில் புறப்பட்ட எதியாட் விமானம் மூலம் அபுதாபியை சென்றடைந்து அங்கிருந்து பின்னர் இன்னோர் எதியாட் விமானம் மூலம் டெல்லியை அதிகாலை 4 மணியளவில் அடைந்தேன். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வர உள்ளூர் விமான நிலையத்துக்கு வாடகை மகிழூந்து (taxi car) மூலம் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு காலை 10.00 மணியளவில் வந்து சேர்ந்தேன் உருப்படியாக!!!!!! புதுவித அனுபவம் டெல்லியில் டெல்லி இந்திய நாட்டின் தலைநகரம் என்ற கோதாவை நினைவில் கொண்டிருந்ததால் சரளமாக ஆங்கிலத்தில் எல்லோரும் கதைப்பர் என தவறாகக் கணித்துவிட்டேன்....