Saturday, May 16, 2009

தமிழே,புதுவிதி எழுது!!!!!!!!!!!!

விதி எழுதியபிரம்மனே, தமிழின் விதியென்ன சொல்வாயா? ஈழ வளநாட்டில் வாடும் தமிழுக்கு விடை சொல்வாயா? பக்தி மொழி பாழடைவது அழகாகுமா? பரமனின் மொழி பரதேசியாகலாமா? பிரம்மனே! கலைமகள் வீணையில் தவழுவது தமிழில்லையா? திருமகள் வாசம் தமிழுக்கு இல்லையா? மலைமகள் மறம் தமிழைவிட்டு நீங்கிடுமோ? விதி எழுதிய பிரம்மனே, என்தமிழின் விதி என்ன? விதியை மதியால் வெல்லும் திறம் தமிழுக்கு உண்டு!!!!!! மூவேந்தரை பெற்றெடுத்த மறத் தமிழுக்குண்டு!!!!!!!! இறை நம்பிக்கையில் உலகில் உள்ள கடவுள்கள் யாவும் வாழுகின்ற மொழியென்ற ஓர் நம்பிக்கையில் என் தமிழின் விதியை உம்மிடம் கேட்க வந்தேன்! என்...

Wednesday, May 13, 2009

தமிழினத்தை கூட்டிக்கொடுத்த கருணை இல்லா நிதி

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் தமிழினப் பற்றாளராக எழுந்த சூரியன் இன்று ஈழத்தமிழால் அஸ்தமனமாவது கண்கூடு! அன்று பெரியார் திடலில் பல்லாயிரம் தமிழ்த் தொண்டர்கள் எழுந்தபோது, அவர்களுடன் இணைந்து எழுந்த கருணாநிதி, அறிஞர் அண்ணாவை தனது சுயபிரபல்யத்துக்குப் பயன்படுத்தி, தனது புத்திசாதூர்யத்தைப் பயன்படுத்தி தமிழ்ப்பற்றாளராக தன்னை வெளிக்காட்டி திமுக தலைமையாகி "தமிழர் தலைவர்" என்ற மகுடத்தை தனக்குத்தானே சூட்டிக் கொண்டார். எம்ஜியாரின் ஆயுட்காலம்வரை தமிழக முதல்வராக வரமுடியாது தவித்தவர். இனி எக்காலமும் வரமுடியாது செய்ய, தமிழகமே விழித்தெழுவாயாக!!!! அரசியலில்...

Thursday, May 7, 2009

தாய்த் திராவிடமே,உங்களின் கைகளுக்கு கிட்டிய எம்மைக் காக்கும் கடைசி ஆயுதம்

என் இனிய திராவிடமே, வாக்கெனும் வேல் கொண்டு காங்கிரசை வீழ்த்து! ஈழத்தில் தமிழழிய கூட்டிக் கொடுத்த திமுகவிற்கு நல்லதொரு பாடம் புகட்டு! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க; உன் வாக்குச் சீட்டைப் பயன்படுத்து!! என் ஆருயிர்த் தமிழகமே, உன் கையில் ஈழத் தமிழின் எதிர்காலம்! வாக்கும் உன்கையில்த்தான்! சிந்தித்து செயலாற்று! கட்சிகள் கடந்து தலைவர்களைத் தொலைத்து தமிழ்த்தாய்க்கு வெற்றிகொடு! என் தாய்த் தமிழகமே, வீழ்வது காங்கிரசு ஆகட்டும்! சூடுகண்ட பூனையாய் திமுக திருந்தட்டும்! வாக்கெனும் வேலால் நீ வெல்கவே! வெல்க...