Thursday, April 30, 2009

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அன்புள்ளம் கொண்டோரே ஓடோடி வாருங்கள். உதவிகள் செய்யுங்கள். யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை மன ஆறுதலை ஊட்டுகின்றது. 30ம்திகதி வரையே முதற்கட்ட பொருட்சேகரிப்பு நடைபெறும் என இவ்விளப்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்களே, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்கலாம்.Principal Name...

Thursday, April 9, 2009

பாரதிதாசனின் இராவணன்

பாரதிதாசனின் அருமையான பாடல் ஒன்று இலங்கை வேந்தன் இராவணனைப் போற்றிப்பாடுவது கண்டு மகிழ்வுற்றேன். என் ஆனந்தத்தை உங்களுடன் பகிர்வதற்காய் இங்கு அப்பாடலைப் பதிவிடுகிறேன். இராவணன் மேலது நீறு என திருஞானசம்பந்தர் ஏற்றிபோற்றிய சைவக்கொழுந்து இராவண மாமன்னன்.திராவிட ஆரிய யுத்தம் தமிழ்வீரனாகிய இராவணனை சீதையைத் திருடிய பாதகனாய் சித்தரித்துள்ளது என்பதே என் கருத்து.என்ன நீங்கள் சொல்கிறீர்கள்? தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்! குன்றெடுக்கும்...

Monday, April 6, 2009

கருணாநிதியை நம்பி ஏமாந்த எம்மை காப்பாற்றும் கடவுளே!!!!!!!!

ஐயனே சிவனே, வாடுகின்ற பயிரால் வாடுவர் சைவர் எம்பெருமானே தாங்கள் சைவர் தானே? கருகிப்போகும் நிலையில் நாம் வாடும் வேளை கயிலையில் உமக்கென்ன வேலை? சிவபூமி உதிரத்தால் சிவப்பாய் இருப்பது சிவனே உமக்கு இழுக்கல்லவா? பிரம்மாஸ்திரத்திடம் இருந்து அர்சுனனைக் காத்த ஆயர்குலக் கண்ணா, கருக்கும் நச்சு ஆஸ்தீரத்திடம் இருந்து காக்காது தமிழரைக் கைவிட்டது ஏன் தானோ? அதர்மம் ஓங்கிறதே............ நீர் எங்கே? சிலுவை ஏற்ற பிரானே, உம்மிலும் எம்முறவுகள் துயர் ஏற்றுவிட்டனர்! இனியும்...