Saturday, February 14, 2009

தோல்விகளில் துவழுகிறீர்களா தோழர்களே.........நீங்கள் வெற்றியின் சீமான்கள்!

தோல்வி என்பது வாழ்க்கையில் வந்துபோகும் சாதரணமான ஒன்றே! தோல்வியில் துவழுதல் வெற்றியை நிராகரிக்கும் செயல் என்றே கூறவேண்டும்.தோல்வியை வெற்றிக்காய் வரையப்படுகின்ற அழைப்பிதழ் எனலாம். எடுத்த எடுப்பிலேயே வெற்றி என்பதை எதிர்பார்ப்பது ஏமாற்றத்திற்கே சில சமயங்களில் வழிவகுக்கும். உழைக்காமல் அதிஷ்டவசத்தால் மலருகின்ற வெற்றிகள் நிலையற்றவை. கைவிரலைவிட அளவில் பெரிய மோதிரங்களை நூல்சுற்றி சிலர் அணிவதை கண்டிருப்பீர்கள். அதுபோன்றதுவே இவ்வகையான வெற்றிகள். விரைவில் தொலைந்துவிடக்கூடியவை. வெற்றியை...