
தாயில் உள்ள பற்று இயல்பாக தாய்மண்ணிலும் மலரும் என்பது யதார்த்தமானது. அதுபோல் கல்வி புகட்டிய கல்லூரியில் பற்று இருப்பதும் தாய்க்கு நிகராய் போற்றுவதும் மாணக்கர் உள்ளங்களில் கல்லூரியானது கோயிலாய்க் காட்சியளிப்பதும் யதார்த்தமானதே.
இவ்வகையில் நோக்கின் எனது பாலர் பாடசாலையின் பெயர்கூட எனக்கு நினைவுக்கு மீட்டமுடியவில்லை. நினைவில் பசுமையாக இன்றும் எனது வாழ்வியலில் தீட்டப்பட்ட அழகான கோலங்களாக எனது பாலர் பாடசாலை காட்சியளித்தாலும் நாட்டில் நிலவுகின்ற யுத்தசூழலில்...