Sunday, December 27, 2009

Helen Kellerஉம் நத்தார் நன்னாளும்

அமெரிக்கா எழுத்தாளராகவும் அரசியல் மாற்றத்துக்காய் குரல் கொடுத்தவரும் விரிவுரையாளராகவும் யுத்தத்துக்கு எதிராக குரல் கொடுத்தவரும் , பெண்ணுரிமை, தொழிலாளர் உரிமை போன்றவற்றுக்காய் அமெரிக்காவில் உழைத்தவருமாகிய Helen Adams Keller (June 27, 1880 – June 1, 1968) என்னும் பெண்மணி பத்தொன்பது மாதக் குழந்தையாக இருந்தபோதே நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையையும் செவிப்புலத்தையும் இழந்திருந்தார். இவர் தனது விடாமுயற்சினாலேயே இத்தகு உயர்நிலையை அடையக்கூடியதாக இருந்தது....

Sunday, December 13, 2009

எமது கல்லூரிக்கு புதுவிதி எழுதுவோம்!!!

கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை என்னும் பொழுது தேன் வந்து பாயுது எம் காதினிலே என்று பாடினால் அது மிகையில்லை.சைவ சாம்ராச்சியமாய் இரத்மலானை மண்ணில் வீற்றிருக்கும் எங்கள் கல்லூரியை நினைத்த பொழுதில் இன்பத் தேன் ஒழுகி உடம்பெல்லாம் புல்லரிக்கும். இராவண மன்னன் சிவப்பு மலர்கள் கொண்டு சிவபெருமானை பூசித்த பயனால் இன்றும் செந்தமிழ்ச் சைவ வாசம் இரத்மலானை மண்ணில் வீசும் அருமை நிலவுகின்றது. இராவணன் பூசித்த பயனால் திருநந்தீஸ்வரமாகவும் கொழும்பு இந்துக் கல்லூரியாகவும் கற்பக விநாயகர் ஆலயமாகவும் இரத்மலானை மண்ணில் சைவநெறியும் தமிழர் பண்பாடும் இன்றும் பேணப்படுவது...

Thursday, November 12, 2009

பாரதியார் ஒரு பேதை-தமிழ்ச் சாதியின் நன்றிக்கடன்!!!!

மெல்லத் தமிழினிச் சாகும் என்றந்தப் பேதை உரைத்தான் ?????? ஓ பாரதி தானே? இன்று பரவலாக தமிழுக்காய் கூடுகின்ற கூட்டங்கள் தொட்டு பட்டிமன்றங்கள்,கட்டுரைகள்,கவிதைகள் என எங்குமே "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகக் கருத்துப் பதியப்படுகின்றது. எவ்வளவு பெரிய அறியாமை! பாரதியின் புகழுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கும் அறியாமையே இது!!!! "புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில்...

Monday, September 14, 2009

பாரதிராஜா என்னும் தமிழ்மறவன் வாழ்க பல்லாண்டே!

இலங்கைத் தமிழருக்காக குரல்கொடுத்து சிறை சென்ற இயக்குனர் அமீர் தயாரித்து நடிக்கும் யோகி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சேரன் அங்கு வருகை தந்திருந்த இயக்குனர் சிங்கம் பாரதிராஜா ஐயாவை "தலை வணங்குகிறேன்" என கூறி தனது தமிழ்பற்றை அழகுபடுத்தியுள்ளார். மேடையில் சேரன் பேசும்போது தனது தமிழ்ப்பற்றை பறைசாற்றியதோடு இலங்கைத் தமிழருக்காக மேடை ஏறாது மௌனமாய் இருக்கும் பாரதிராஜாவின் விரதத்தையும் கௌரவப்படுத்தியுள்ளார். நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன்...

Monday, August 24, 2009

சேரனுக்கு தமிழ்த் திமிருங்கோ!!!!!!

வார இதழ்களில் வெளியான திரைவிமர்சனங்களில் "நீளும் கடிதங்கள் தூக்க மாத்திரைகள்" என பொருள்பட ஒருசிலவற்றிலும் தரமான இயக்குனர் சேரன் என சேரனின் புகழை ஏனைய சிலவற்றிலுமாக பொக்கிசம் தீட்டப்பட்டிருக்க; திரையில் பார்க்க இரவு நேரக் காட்சிக்கு சென்றிருந்தேன். கந்தசாமி பார்க்கும் ஆவலைவிட பொக்கிசம் பார்க்கும் ஆவலே மேலிட்டிருந்தது. காரணம் சேரனின் திறமைகள்! உண்மையிலேயே ஒரு இலக்கியம்-பொக்கிசம். படம் முடிந்தபோது திரையரங்கை சுற்றிப் பார்த்தேன்.படம் பார்க்க வந்திருந்த கூட்டம் ஐம்பதைத் தாண்டாது. நித்திரையில்...

Wednesday, August 19, 2009

அருள்மழை பொழியும் நல்லூரான் தேர்

முருகன் என்றால் அழகன் ஆகும். அழகன் என்பதற்கு பொருள் நல்லூர் முருகன்.யாழை மட்டுமல்ல ஈழ வளநாட்டை அருள்மழையால் ஈர்த்து நல்லருள் பாலிக்கின்ற முருகப்பெருமானின் தேர்த்திருவிழா இன்று இனிதே நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ அரோகரா ஒலிகள் விண்ணை முட்ட தந்தைக்கே பிரணவப் பொருளை போதித்த முருகப் பெருமான் தேரேறி நல்லூர் ஆலய வீதியில் வலம்வந்த காட்சியை நேரில் காணும் பேறு கிட்டாதவர்களுக்காய் (என்னையும் சேர்த்து)நிழற்படங்களை பதிவேற்றுகிறேன். இப்படங்கள் இணையங்களில் இருந்து...

Friday, August 14, 2009

தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும்

எங்கள் இன்பத்தை சிதைத்த இந்தியத் தாயே, உனது இன்பநாள் இன்று! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும் ஆனால் நீ...

வள்ளுவன் சிலைகேட்டானா? மானம் கேட்டானா?

சுமுக நிலைவந்ததென்ற பாவியேவள்ளுவன் சிலைகேட்டானா?மானம் கேட்டானா? பண்டப் பரிமாற்றமாய்சிலைதிறப்பு மானங்கெட்டவனே ஒக்கேனக்கல்எந்தப் பரிமாற்றமாகும்?வாடும் காவேரிவருத்தவில்லையா? குளிரூட்டிய தனமிகு"தான" வீட்டில்சக்கரவண்டியில் சொகுசுமெத்தையில் நேரத்துக்குசாப்பாடென வாழும்உனக்குஎங்கள் நாட்டில்சுமுகநிலை எங்கனம்வந்ததறிந்தாய்? கோமாளி கூட்டமென்றுகூத்தாடி சொன்னபோதுமானங்கெட்டு அமைதியாய்இருந்த இழியவன்நீ! சீ உன்னைநம்பி அலையும்தமிழ் தலைகள்வெட்கமில்லா அடிமை சாசனங்க...

Thursday, August 13, 2009

அரங்கன் சன்னிதியில் தமிழுக்காய் கண்ணீர்மல்கி

அரங்கனின் ஆலயத்தில்இத்திங்கள் 12ம் நாள் நான் கேட்ட கேள்விகள் வரங்கள் எக்காலம் ஆழ்வார் நாவில் தவண்ட தமிழுக்கு விடை சொல்லும்? "குட திசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கி" அரங்கன் நீர் இருந்து என்ன பயன்? ஐயனே, காத்தற் கடவுளே, விபூடணிடம் நீர் கொடுத்த வாக்கைத் தொலைத்ததேன்? மாண்டு போன இனம் கதறியபோது மந்திர ஒலியில் மயங்கி இருந்தமை நீதியா கண்ணா? இலங்கையைக் காப்பேன் என்றது தமிழுக்கு கொடுத்த வாக்கில்லையா? திருமாலே,அரங்கா, நாராயணா, எழுப்பிய...

காண்டம் புதிரும் புனிதமும் கொண்டதா?

காண்டம்! முழுக் காண்டமும் கேட்டேன்.சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவனானாலும் காண்டம் சொன்ன விதம், சொல்ல முன்னர் தொடுத்த கேள்விகள் நம்பிக்கையை பெரிதும் ஏற்படுத்தவில்லை.அவநம்பிக்கையையும் சேர்த்தே ஏற்படுத்திற்று. ஆனாலும்? நம்பிக்கைக்கு அவ நம்பிக்கை ஒன்றுக்கு ஒன்றென்ற விகிதம்! நம்பிக்கையா அவ நம்பிக்கையா மேலோங்கும் என்பது காலம் உணர்த்தும்! சென்ற பிறவி கூடல் மாநகர் மதுரை திருமண்ணில் பிராமணன்! செய்த பாவம் பிராமண தொண்டை மறந்தமை! பெற்ற பேறு ஈற்றில் பெற்ற புத்தி! ஆதலால் மறுபிறவி மீண்டும் அரிய மனிதப் பேறு! தூய்மையற்ற பிராமணரே, உருத்திராக்கத்துடன் தங்கம் ஜொலிக்க...

Saturday, August 1, 2009

வீணை வாழ்க

வீணை ஆசிரியராகவும் கனடாவில் வீணாலய நிறுவுனராகவும் விளங்கி இசைப் பணியாற்றும் திருமதி.ஜெயந்தி இரத்தினகுமார் அவர்கட்கு ஒரு இசை இரசிகனாக இக்கவியை சமர்ப்பணம் செய்கிறேன். வீணாலயத்தின் இணைய முகவரிக்கு சென்று வீணாலயத்தின் பணிகளை அறிக :- வீணாலயம் (வீணாலயம் என்பதன்மேல் சொடுக்குக)கலைவாணி அருள்வாழும் வீணைவாழ்கதமிழ்நாதம் கனடாவில்என்றும் உயிர்வாழஇசைப் பணியாற்றும்வீணை வாழ்கசிவனருள் கூடிசிவநாதம் ஓதும்வீணை வாழ்கதங்கள் கைகளில் தவழும் தமிழ்மற இராவணன் சிவனார்க்குஅர்பணித்த...

Saturday, July 11, 2009

மாமல்லபுரம் என்னும் சிற்பக்கலைக் கருவூலம்

மாமல்லபுரம் ஓர் கலைக் சிற்பக் களஞ்சியம் என்று எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்வர். எனது எண்ணங்கள் மாமல்லபுரத்தை நோக்கி எப்போதும் ஓடிய வண்ணமேயிருந்தது.அப்படி என்ன அழகுக் களஞ்சியம் அங்குண்டு என்று ஆராய ஆவலுடன் இருந்தேன். தமிழகம் வந்ததும் என் நண்பன் காந்தனிடம் "போவோமா?" என்று கேட்ட முதல் சுற்றுலா மாமல்லபுரத்துக்குத்தான்.சிற்பங்களை இரசித்து சுவைக்கும் பழக்கமேதும் எனக்கு இருந்ததில்லை. கோயில்களுக்குச் சென்றால் கடவுளாகக் கண்டு வணங்குவதுடன் சரி. சிற்பங்களின்...

Friday, July 3, 2009

இந்தி தெரியாதுங்கோ

தமிழகப் பயணம் பெலரசில் இருந்து மதியம் 2.20 மணியளவில் புறப்பட்ட எதியாட் விமானம் மூலம் அபுதாபியை சென்றடைந்து அங்கிருந்து பின்னர் இன்னோர் எதியாட் விமானம் மூலம் டெல்லியை அதிகாலை 4 மணியளவில் அடைந்தேன். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வர உள்ளூர் விமான நிலையத்துக்கு வாடகை மகிழூந்து (taxi car) மூலம் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு காலை 10.00 மணியளவில் வந்து சேர்ந்தேன் உருப்படியாக!!!!!! புதுவித அனுபவம் டெல்லியில் டெல்லி இந்திய நாட்டின் தலைநகரம் என்ற கோதாவை நினைவில் கொண்டிருந்ததால் சரளமாக ஆங்கிலத்தில் எல்லோரும் கதைப்பர் என தவறாகக் கணித்துவிட்டேன்....

Saturday, June 20, 2009

எனக்குத் தென்பில்லைத் தாயே

சுவையானது -எங்கள்செம்மொழித் தமிழ் அழகானது- எங்கள்திராவிடத் தமிழ் திருவருள் கொண்டதுஎங்கள் சிவத்தமிழ் புல்லரிக்க வைப்பதுஎங்கள் முத்தமிழ் நறுமணமானது எங்கள்ஈழத் தமிழ் தாயே, உயிரிலும் இனியதமிழ் வாடுகையில்வாழ்த்துகள் நவிலத்தென்பில்லைத் தாயே! தங்கள் பிறந்தநாள்இனிய தமிழின்இன்பத்தோடு கூடுகையில்; எட்டுத் திக்கும்முரசு கொட்டுகிறேன் -அம்மாதங்கள் பிறந்தநாளைவாழ்த்தி! இவ்வண்ணம் என்னைவளர்த்த என்இனிய தாயே, மங்காத தமிழ்பொங்க,தமிழ்ப் பாருக்குநல்ல செய்திகூட, இறைவனைத்...

Wednesday, June 3, 2009

அமித்தாப்பச்சனும் கலைஞரும்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகம் வழங்கவிருந்த கௌரவ கலாநிதி (டாக்டர் பட்டம்) பட்டத்தை ஏற்க வேண்டாம் என என் மனம் கூறியது. அதனாலேயே அதனை நான் அமைதியாக மறுத்து விட்டேன் என்று இந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கூறியுள்ளார். எனது நாட்டு மக்களுக்கு அவமானம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நான் அந்தப் பட்டத்தை ஏற்கும் மன நிலையில் இல்லை. இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து முழுமையான அறிக்கை வருவதற்கு முன்பே நீங்கள் எடுத்த முடிவா...

Saturday, May 16, 2009

தமிழே,புதுவிதி எழுது!!!!!!!!!!!!

விதி எழுதியபிரம்மனே, தமிழின் விதியென்ன சொல்வாயா? ஈழ வளநாட்டில் வாடும் தமிழுக்கு விடை சொல்வாயா? பக்தி மொழி பாழடைவது அழகாகுமா? பரமனின் மொழி பரதேசியாகலாமா? பிரம்மனே! கலைமகள் வீணையில் தவழுவது தமிழில்லையா? திருமகள் வாசம் தமிழுக்கு இல்லையா? மலைமகள் மறம் தமிழைவிட்டு நீங்கிடுமோ? விதி எழுதிய பிரம்மனே, என்தமிழின் விதி என்ன? விதியை மதியால் வெல்லும் திறம் தமிழுக்கு உண்டு!!!!!! மூவேந்தரை பெற்றெடுத்த மறத் தமிழுக்குண்டு!!!!!!!! இறை நம்பிக்கையில் உலகில் உள்ள கடவுள்கள் யாவும் வாழுகின்ற மொழியென்ற ஓர் நம்பிக்கையில் என் தமிழின் விதியை உம்மிடம் கேட்க வந்தேன்! என்...

Wednesday, May 13, 2009

தமிழினத்தை கூட்டிக்கொடுத்த கருணை இல்லா நிதி

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் தமிழினப் பற்றாளராக எழுந்த சூரியன் இன்று ஈழத்தமிழால் அஸ்தமனமாவது கண்கூடு! அன்று பெரியார் திடலில் பல்லாயிரம் தமிழ்த் தொண்டர்கள் எழுந்தபோது, அவர்களுடன் இணைந்து எழுந்த கருணாநிதி, அறிஞர் அண்ணாவை தனது சுயபிரபல்யத்துக்குப் பயன்படுத்தி, தனது புத்திசாதூர்யத்தைப் பயன்படுத்தி தமிழ்ப்பற்றாளராக தன்னை வெளிக்காட்டி திமுக தலைமையாகி "தமிழர் தலைவர்" என்ற மகுடத்தை தனக்குத்தானே சூட்டிக் கொண்டார். எம்ஜியாரின் ஆயுட்காலம்வரை தமிழக முதல்வராக வரமுடியாது தவித்தவர். இனி எக்காலமும் வரமுடியாது செய்ய, தமிழகமே விழித்தெழுவாயாக!!!! அரசியலில்...

Thursday, May 7, 2009

தாய்த் திராவிடமே,உங்களின் கைகளுக்கு கிட்டிய எம்மைக் காக்கும் கடைசி ஆயுதம்

என் இனிய திராவிடமே, வாக்கெனும் வேல் கொண்டு காங்கிரசை வீழ்த்து! ஈழத்தில் தமிழழிய கூட்டிக் கொடுத்த திமுகவிற்கு நல்லதொரு பாடம் புகட்டு! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க; உன் வாக்குச் சீட்டைப் பயன்படுத்து!! என் ஆருயிர்த் தமிழகமே, உன் கையில் ஈழத் தமிழின் எதிர்காலம்! வாக்கும் உன்கையில்த்தான்! சிந்தித்து செயலாற்று! கட்சிகள் கடந்து தலைவர்களைத் தொலைத்து தமிழ்த்தாய்க்கு வெற்றிகொடு! என் தாய்த் தமிழகமே, வீழ்வது காங்கிரசு ஆகட்டும்! சூடுகண்ட பூனையாய் திமுக திருந்தட்டும்! வாக்கெனும் வேலால் நீ வெல்கவே! வெல்க...

Thursday, April 30, 2009

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அன்புள்ளம் கொண்டோரே ஓடோடி வாருங்கள். உதவிகள் செய்யுங்கள். யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை மன ஆறுதலை ஊட்டுகின்றது. 30ம்திகதி வரையே முதற்கட்ட பொருட்சேகரிப்பு நடைபெறும் என இவ்விளப்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்களே, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்கலாம்.Principal Name...

Thursday, April 9, 2009

பாரதிதாசனின் இராவணன்

பாரதிதாசனின் அருமையான பாடல் ஒன்று இலங்கை வேந்தன் இராவணனைப் போற்றிப்பாடுவது கண்டு மகிழ்வுற்றேன். என் ஆனந்தத்தை உங்களுடன் பகிர்வதற்காய் இங்கு அப்பாடலைப் பதிவிடுகிறேன். இராவணன் மேலது நீறு என திருஞானசம்பந்தர் ஏற்றிபோற்றிய சைவக்கொழுந்து இராவண மாமன்னன்.திராவிட ஆரிய யுத்தம் தமிழ்வீரனாகிய இராவணனை சீதையைத் திருடிய பாதகனாய் சித்தரித்துள்ளது என்பதே என் கருத்து.என்ன நீங்கள் சொல்கிறீர்கள்? தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்! குன்றெடுக்கும்...

Monday, April 6, 2009

கருணாநிதியை நம்பி ஏமாந்த எம்மை காப்பாற்றும் கடவுளே!!!!!!!!

ஐயனே சிவனே, வாடுகின்ற பயிரால் வாடுவர் சைவர் எம்பெருமானே தாங்கள் சைவர் தானே? கருகிப்போகும் நிலையில் நாம் வாடும் வேளை கயிலையில் உமக்கென்ன வேலை? சிவபூமி உதிரத்தால் சிவப்பாய் இருப்பது சிவனே உமக்கு இழுக்கல்லவா? பிரம்மாஸ்திரத்திடம் இருந்து அர்சுனனைக் காத்த ஆயர்குலக் கண்ணா, கருக்கும் நச்சு ஆஸ்தீரத்திடம் இருந்து காக்காது தமிழரைக் கைவிட்டது ஏன் தானோ? அதர்மம் ஓங்கிறதே............ நீர் எங்கே? சிலுவை ஏற்ற பிரானே, உம்மிலும் எம்முறவுகள் துயர் ஏற்றுவிட்டனர்! இனியும்...

Saturday, February 14, 2009

தோல்விகளில் துவழுகிறீர்களா தோழர்களே.........நீங்கள் வெற்றியின் சீமான்கள்!

தோல்வி என்பது வாழ்க்கையில் வந்துபோகும் சாதரணமான ஒன்றே! தோல்வியில் துவழுதல் வெற்றியை நிராகரிக்கும் செயல் என்றே கூறவேண்டும்.தோல்வியை வெற்றிக்காய் வரையப்படுகின்ற அழைப்பிதழ் எனலாம். எடுத்த எடுப்பிலேயே வெற்றி என்பதை எதிர்பார்ப்பது ஏமாற்றத்திற்கே சில சமயங்களில் வழிவகுக்கும். உழைக்காமல் அதிஷ்டவசத்தால் மலருகின்ற வெற்றிகள் நிலையற்றவை. கைவிரலைவிட அளவில் பெரிய மோதிரங்களை நூல்சுற்றி சிலர் அணிவதை கண்டிருப்பீர்கள். அதுபோன்றதுவே இவ்வகையான வெற்றிகள். விரைவில் தொலைந்துவிடக்கூடியவை. வெற்றியை...

Monday, January 26, 2009

என்னுணர்வோடு கலந்த கொழும்பு சைவ சாம்ராச்சியம்

தாயில் உள்ள பற்று இயல்பாக தாய்மண்ணிலும் மலரும் என்பது யதார்த்தமானது. அதுபோல் கல்வி புகட்டிய கல்லூரியில் பற்று இருப்பதும் தாய்க்கு நிகராய் போற்றுவதும் மாணக்கர் உள்ளங்களில் கல்லூரியானது கோயிலாய்க் காட்சியளிப்பதும் யதார்த்தமானதே. இவ்வகையில் நோக்கின் எனது பாலர் பாடசாலையின் பெயர்கூட எனக்கு நினைவுக்கு மீட்டமுடியவில்லை. நினைவில் பசுமையாக இன்றும் எனது வாழ்வியலில் தீட்டப்பட்ட அழகான கோலங்களாக எனது பாலர் பாடசாலை காட்சியளித்தாலும் நாட்டில் நிலவுகின்ற யுத்தசூழலில்...

Monday, January 12, 2009

கிழக்கு ஈழவளநாடு

கடற்கன்னிகள் தமிழ்பாடும்வளமான மட்டக்களப்புகாதல் ஊட்டும்இயற்கை வனப்பு;எங்கள் சிவத்தமிழ்வேந்தன் தொழுததிருவருள் வாழும்திருகோணமலைதிரு ஞானசம்பந்தன்தமிழால் திருவருள்பொழியும் திருகோணமலைஎன்னுள் சிவஞானமூட்டும்தென்கயிலாயம்;அம்பாறை-இதுமட்டுநகர் ஈன்றெடுத்தஇன்னோர் மட்டுநகர்என் நெஞ்சுக்குள்சிறகுபூட்டும் கொள்ளைஅழகு நகர்வாழிய தமிழ்வாழ்க கிழக்குஈழ நாடே!facebookஇல் கிழங்கிலங்கையின் புகழ்கூட்டும் குழுமத்தில் அபிமானமுள்ளவனாக இணைந்தபின் (Batticaloa எனும் pageஇல் fanஆக இணைந்து)அங்கு யான் பொறித்த தமிழை இங்கு மறுபடி பொறிக்கின்றேன்.பொதுவாக மீன்பாடும் தேனாடு என்பர்.ஆங்கிலேயருக்கு...