Thursday, December 18, 2008

தமிழ் திரைப்படங்களும் சமூகமும்-என் பார்வையில்

இலக்கியத்தின் ஒரு முகம்தான் திரைப்படங்கள். திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் ஆழமானது. இன்றைய ஊடகங்களில் மக்களுக்கு இலகுவாக செய்தியைக் காவக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகமாக திரைப்படங்கள் விளங்குகின்றன. மக்கள் திலகம் எம்ஜியாரை முதலமைச்சராக வந்து அசைக்க முடியாத ஆட்சியின் மூலம் தமிழகத்தை அழகுபடுத்த வைத்ததும் திரைப்பட ஊடகம்தான் என்பது வெள்ளிடைமலை. தமிழ்ப் பற்று இல்லாத ஜெயலலிதாவிடம் அவர் கட்சியினரும் அவரை முதலமைச்சராக்கி அழகுபார்த்த மக்களையும் சரணடையச் செய்திருப்பதும் திரைப்பட ஊடகம் செய்த மாயையே. ஏன் தமிழக முதலமைச்சராக இன்றுள்ள பலதடவைகள்...