Sunday, November 2, 2008

இரத்மலானையில் ஓர் சைவச் சொத்து

பிள்ளையாரிடம் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று தொடங்கி சங்கத் தமிழ் மூன்றும் தா என்று வேண்டுகிறார் ஔவையார் . ஆம்; நான் கல்லூரிக்குள் நுழையும்போது கல்லூரியில் வீற்றிருக்கும் கற்பக விநாயகப் பெருமானின் திருவருளை வணங்காது உள் நுழைவதில்லை. கல்லூரிக் காலத்தில் நாள்தோறும் கற்பக விநாயகனின் நல்லருளாட்சியை நுகர்ந்த அவன் அடியார்களில் நானொருவன் என்பதில் மகிழ்வோடு கூடிய பக்தி எனக்கு. கல்லூரியில் உயர்தரம் படிக்கும் காலகட்டங்களில் சில துர்சூழல்களால்...