
நான் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் செட்டம்பர் விடுமுறைக்கு தமிழகத்திற்கு என் அன்னையிடம் சென்றிருந்தவேளை என்னோடு ஒன்றாக கல்லூரியில் கல்விபயின்ற ஆருயிர்த் தோழன் காந்தரூபனூடாக பழக்கமான முகம்-பாரதி.
நண்பனின் நண்பன் நண்பனாகும் மேன்மை நட்பின் அழகுகளில் ஒன்றாகும். எனக்கும் பாரதிக்கும் இப்படி காந்தன்(காந்தரூபனை இப்படித்தான் அழைப்பது என் வழமை) நட்பெனும் பாலத்தை வரைந்தான். இலங்கைக்கும் தமிழகதிற்கும் வரையப்பட்ட சேதுபாலம்(இராமபாலந்தானப்பா?) போல் எமக்கு காந்தன் இட்டபாலம்...